நேரம் பார்த்து கைவிட்ட காங்கிரஸ்.. கவனிச்சீங்களா.. தவெக விஜய்க்கு இப்படி பண்ணிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்போதுமில்லாத ஒரு அரசியல் நெருக்கடியை தமிழகத்திற்கு அளித்துள்ளன. 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக). இருப்பினும், மெஜாரிட்டியை நிரூபிக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் குழப்பத்திலும் இழுபறியிலும் சிக்கியுள்ளது.

தமிழக அரசியலில் நிலவி வந்த பெரும் பரபரப்புகளுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முதலமைச்சர் கனவு ஒரே இரவில் கலைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி அவர் முதல்வர் ஆவதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடத்திய நள்ளிரவு செய்தியாளர் சந்திப்பும், ஆளுநரிடம் அவர் அளித்த புகாரும் விஜய்க்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

TN Political Crisis Can Vijay s TVK Secure Majority Despite Congress s Lack of Guidance

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?

நேற்று மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரைச் சந்தித்த விஜய், தனக்கு 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். மெஜாரிட்டி கணக்கைக் காட்டி ஆட்சியமைக்க அவர் தீவிரம் காட்டிய நிலையில், அந்த ஆதரவு கடிதங்களில் சில முக்கிய ஓட்டைகள் இருந்தன. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் அதில் இடம்பெறவில்லை.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, அ.ம.மு.க-வின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் விஜய்யின் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தது. இதுவே ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தினகரன் குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளதால்.. தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இப்போது விசிக ஆதரவு கொடுத்தால் மட்டுமே, அதிலும் ஆளுநர் மனது வைத்தால் மட்டுமே விஜய் ஆட்சி அமைப்பார் என்ற சூழல் உள்ளது.

காங்கிரஸின் பங்கு: கூட்டணிக் கட்சியும் வழிகாட்டாத கைகளும்

இந்த அரசியல் சதுரங்கத்தில் காங்கிரஸின் அணுகுமுறை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்க்குத் தேவையான அரசியல் வழிகாட்டுதல்களை வழங்கத் தவறிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

விஜய் ஆளுநரைச் சந்தித்தபோது, 107 தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 112 பேரின் ஆதரவுக் கடிதத்தை அளித்தார். ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோராமல், கூட்டணியாகக் கோரியது மிகப்பெரிய சட்ட நுணுக்கத் தவறு (Blunder mistake) எனச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி, விஜய்க்குச் சரியான ஆலோசனைகளை வழங்கி ஆளுநரின் பிடிவாதத்தை முறியடித்திருக்கலாம். ஆனால், அவர்கள் வெறும் கூட்டணிக் கட்சியாக மட்டுமே இருந்துவிட்டு, வழிகாட்டும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரிகிறது.

போலி கையெழுத்து மற்றும் கடத்தல் புகார்கள்

மறுபுறம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்வைத்துள்ள புகார்கள் விஜய்யின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. தனது கட்சியின் ஒரே எம்.எல்.ஏ-வான காமராஜின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு தவெக ஆதரவு திரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஊடகங்கள் முன் தோன்றிய காமராஜ், "நான் விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" எனத் தெளிவுபடுத்தியது தவெக-விற்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதிலும் காங்கிரஸ் விஜய்க்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை.

ஆளுநரின் பிடிவாதம்: அடுத்தது என்ன?

தற்போது சிபிஎம், சிபிஐ மற்றும் காங்கிரஸின் ஆதரவுடன் விஜய்யிடம் 116 உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஆட்சி அமைக்க இன்னும் 2 இடங்களே தேவை. விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் ஊசலாட்டத்திலேயே உள்ளது. குறிப்பாக ஐயுஎம்எல் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளது.

குதிரை பேரம் மற்றும் மோசடிப் புகார்கள் ஆளுநர் மாளிகையை எட்டியுள்ளதால், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விஜய்யின் அரசியல் அனுபவமின்மையும், அவருக்குப் பின்னால் இருந்து வழிகாட்ட வேண்டிய காங்கிரஸ் போன்ற முதிர்ச்சியான கட்சிகளின் மௌனமும் தமிழகத்தை ஆளுநர் ஆட்சி அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கித் தள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

முடிவற்ற இந்த அரசியல் இழுபறியில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது விசிகவின் கைகளிலும் ஆளுநரின் முடிவிலுமே தங்கியுள்ளது. ஒரு நடிகராக மக்கள் செல்வாக்கைப் பெற்ற விஜய், ஒரு அரசியல் தலைவராக இந்த இக்கட்டான சூழலை எப்படிக் கையாளப் போகிறார் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+