Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. அடுத்தடுத்து நன்மைகள் நடக்கும் பொற்காலம்

Subscribe to Oneindia Tamil

Viruchigam Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

viruchigam-rasi-palan-what-kind-of-benefits-will-viruchigam-rasi-people-get-from-may-11-to-18

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)

விருச்சிக ராசியினருக்கு எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். நிறைய சுப காரியங்ளைச் செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். தைரியம் ஏற்படும். மன அழுத்தம் தீரும். உறவினர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அனுகூலம்

எல்லா விஷயங்களிலும் அனுகூலமும், நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். பிறர் குடும்ப விஷயத்தில் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக வைகாசி மாதத்தில் மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

புதிய கடன்கள்

வெற்றி மேல் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். தடையில்லா வெற்றிகள் உண்டாகும். பஞ்சம ஸ்தானத்தில் சனி, செவ்வாய் விலகிவிட்டதால் மனதில் இருந்த புதிர், அசிங்கம், அவமானம் போன்ற அனைத்தும் நீங்கும். வாரத்தின் இறுதி பகுதியில் இருந்து நிறைய பேருக்கு புதிய கடன் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி ஏற்படும். தலைமைப் பதவிகள் கிடைக்கும். நல்ல மாற்றங்கள், பெரிய வெற்றிகள் ஏற்படும்.

திடீர் பணவரவு

நினைத்த காரியங்கள் நடக்கும். கம்யூனிகேஷனால் பிரச்சனை, மெசேஜ் அனுப்புவது, நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திடீர் பண வரவுகள் வந்தாலும் அதனை ஜாலியாக செலவளிப்பீர்கள் என்பதால் கவனம் தேவை. அஷ்டமத்தில் சுக்கிரனும், குருவும் சேர்ந்திருப்பதால் பெண்கள், பெண்கள் சார்ந்த விஷயங்கள், வண்டி, வாகனங்களில் செலவுகள் ஏற்படும். இதில் அவமானம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அபாயம்

7 ஆம் இடத்தில் சூரியன், புதன் இருப்பதால் கணவன், மனைவிக்குள் தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். மனைவியின் முகம், கண், பல் பகுதியில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் வெளியில் பணம் கொடுத்து ஏமாறுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாமல் பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது சந்தோஷங்களைத் தரும். பதட்டத்தை தவிர்க்க வேண்டும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம்.

வழிபாடு

வயிறு, கழிவுப் பாதை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முருகரின் அனுகூலம் காணப்படும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 65 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+