விஜய் முதல்வராவதை தடுக்க திட்டமா?.. செய்தியாளர் கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் உறுதியாக உள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஐயூஎம்எல், அமமுக தவெகவுக்கு ஆதரவில்லை என கூறிவிட்டனர். ஆளுநரிடம் தவெக வழங்கிய கடிதத்தில் அமமுக கட்சியின் ஒரே எம்எல்ஏவான காமராஜின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டனர். இதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்தார்.
எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்று புகாரளித்தார். பிறகு நள்ளிரவு காமராஜ் மற்றும் தினகரன் ஆளுநர் அலுவலகம் சென்று தவெக வழங்கிய கடிதம் போலியானது என்று கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் காமராஜ் தவெகவுக்கு ஆதரவாக கையெழுத்து போட்ட வீடியோவை தவெக வெளியிட்டது. இதில் குதிரை பேரம் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. விஜய் முதலமைச்சராவதை தடுக்க பார்க்கிறீர்களா என்கிற கேள்விக்கு, தினகரன் பதில் அளித்துள்ளார்.

விஜய் ஆணவம்
இதுதொடர்பாக சென்னையில், எம்எல்ஏ காமராஜ்வுடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர், "காமராஜ் அளித்த கடிதத்தின் ஒரிஜினல் நகலை வெளியிடலாமா. நேற்று மழை பெய்ததற்கு கூட பாஜக காரணம் என்று சொல்வீர்களா. விஜய் ஆட்சியமைத்தால் அது தமிழ்நாட்டிற்கு பேரழிவு. ஆட்சியமைப்பதற்கே இவ்வளவு முறைகேடு செய்து போலி கடிதம் கொடுத்துள்ளனர். இவ்வளவு திமிராக, ஆணவமாக செயல்பட்டுள்ளனர்.
துணிச்சல் இருந்தால் அதன் ஒரிஜினல் நகலை வெளியிட வேண்டும். ஊழலற்ற ஆட்சி செய்வேன் என்று கூறிய விஜய் ஆட்சியமைப்பதற்கே ஊழல் செய்கிறார். காமராஜ் கையெழுத்து போடுவதாக வெளியிட்ட வீடியோ போலியானது. அதை ஏஐ மூலம் சித்தரித்துள்ளனர். தவெகவினர் என்னை மிரட்ட பார்கிறார்கள். என் ஒப்புதலுடன் கடிதம் கொடுத்ததாக சொல்லி கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் ஒரிஜினல் கடிதம் வெளியிட்டவுடன் தவெக ஓடிவிட்டனர்" என்றார்.
முதலமைச்சர் பதவியேற்க தடையா
"இந்தா பிரச்சனை முடியும் வரை விஜய் முதலமைச்சராக பதவியேற்க கூடாது என்று கேட்பீர்களா" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தினகரன், "அப்படி கேட்க மாட்டோம். அப்படி கேட்டால் நான் பாஜகவோடு சேர்ந்து இப்படி நாடகம் போட்டு தடுத்துவிட்டதாக செய்தி வெளியிடுவீர்கள்" என்று பதில் அளித்தார். அவரின் இந்த பதிலால் தவெகவினர் ஓரளவுக்கு ஆறுதலடைந்துள்ளனர். அதேநேரத்தில் அமமுக புகார் அளித்திருப்பதால் ஆளுநர் இதில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications