தவெக எம்எல்ஏக்கள் ஏழைகள் இல்லை.. கோடீஸ்வர எம்எல்ஏக்கள் எந்த கட்சியில் அதிகம் தெரியுமா? ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்பட மொத்தம் 233 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 193 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக எந்தெந்த கட்சிகளில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதனால் விஜய் உள்பட மொத்தம் 233 பேர் எம்எல்ஏக்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

dmk aiadmk tvk crorepati

இந்நிலையில் தான் தமிழக எம்எல்ஏக்களில் கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கும் கட்சி எது? என்பது பற்றிய முக்கிய விவரம் வெளியாகி உள்ளது. இதுபற்றி விவரத்தை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ADR) சென்னையில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

193 பேர் கோடீஸ்வரர்கள்

''தமிழக சட்டசபையில் உள்ள 233 எம்எல்ஏக்களில் (விஜய் 2 தொகுதிகளில் வென்றவர்) இவர்களில் 193 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களிடம் குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.குறிப்பாக 35 சதவீத எம்எல்ஏக்களிடம் ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை சொத்து உள்ளது. 16 சதவீதம் பேரிடம் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சொத்துகள் உள்ளது. 32 சதவீதம் பேரிடம் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

திமுக முதலிடம்

கட்சி வாரியாக பார்த்தால் திமுகவில் தான் அதிகமான எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்களில் 57 பேர் வெற்றி பெற்றனர். இதில் 57 பேர் கோடீஸ்வரர்கள். இது 97 சதவீதமாகும். அதேபோல் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 47 பேர் வெற்றி பெற்றனர். இதில் 44 பேர் கோடீஸ்வரர்கள்.


விஜய் கட்சியில் எத்தனை கோடீஸ்வரர்கள்?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 108 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றார். இதன்மூலம் வெற்றி பெற்ற 107 பேரில் 77 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். தவெகவின் மொத்த எம்எல்ஏக்களில் 72 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். அதேபோல், காங்கிரஸ், பாமக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் வெற்றி பெற்றவர்களும் கோடீஸ்வரர்கள் தான். விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வென்ற தலா 2 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக இல்லை.

சராசரி சொத்து மதிப்பு உயர்வு

இப்போது தேர்வு செய்யப்பட்ட 233 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு கடந்த 2021 ஆண்டை ஒப்பிடும்போது கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 2021ல் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.48 கோடியாக உயர்ந்துள்ளது.

கட்சி வாரி சராசரி சொத்தில் பின்தங்கிய திமுக

கட்சி வாரியாக பார்த்தால் அதிமுக எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.152.89 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 2வதாக தவெகவின் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.27 கோடியாகவும், திமுக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.14 கோடியாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.17 கோடியாகவும், பாமக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22 கோடியாவும், ஐயூஎம்எல் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.4 கோடியாகவும், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4 கோடியாகவும், விசிக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மிப்பு ரூ.89 லட்சமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.68 லட்சமாகவும் உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+