சென்னை: தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தின் போது பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவரை கைது செய்யும் பொருட்டு சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் போராட்டம் மற்றும் வழக்குப் பதிவு
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக தஞ்சாவூரில் திங்கள்கிழமை அன்று பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி அமைப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் காவல்துறை செவ்வாய்க்கிழமை அன்று உதயநிதி ஸ்டாலின் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தது. இந்த புகாரின் பேரில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பேச்சின் உள்ளடக்கங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட செய்தி வெளியானதுமே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தைச் சுற்றி கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில், துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்றனர். காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி அவர்களைத் தடுத்து நிறுத்தி உரையாடினார். "உதயநிதி தனது அறையில் குளித்துக் கொண்டிருக்கிறார், சற்று காத்திருங்கள்" என்று அதிகாரிகளிடம் அமைதியாகக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காவல்துறையினரின் உடனடி கைது நடவடிக்கை சற்று தாமதமானது. வீட்டின் முன் திரண்ட மாஜி அமைச்சர்கள் - அதிகாரிகளுடன் வாக்குவாதம் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக் காவல்துறை வந்துள்ள செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, திமுகவின் முக்கிய தலைவர்களும் மாஜி அமைச்சர்களுமான சேகர் பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோர் அவசரமாக நீலாங்கரை இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். வீட்டின் வாசலிலேயே துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த அமைச்சர்கள், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டனர். சட்டப்பூர்வமான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கும்போது, அரசியல் உள்நோக்கத்தோடு அவசர அவசரமாக கைது செய்ய முனைவது நியாயமற்றது என்று அவர்கள் அதிகாரிகளிடம் காரசாரமாக வாதிட்டனர். இதனால் நீலாங்கரை இல்லத்திற்கு வெளியே நீண்ட நேரமாகப் பதற்றமான சூழல் நீடித்தது. மறுபுறம், தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தவெக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ் மோகன், கீர்த்தனா மற்றும் வெங்கடராமன் உள்ளிட்ட தலைவர்கள் உதயநிதியின் உரையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், இந்த பேச்சைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு டிவிகே தொண்டர்களுக்கு ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.நீலாங்கரை இல்லத்தில் காவல் படை
ரூமில் குளிக்கிறார் - கிருத்திகா உதயநிதியின் பதில்