சி.ஜோசப் விஜய் என்னும் நான்.. சொன்ன அடுத்த நிமிடமே இது நடக்குமா? தமிழக மக்களின் ஒரே எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் நாளை காலை நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், நாளை காலை 11.00 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தவெக-வின் கூட்டணி கட்சி தலைவர்கள், ராகுல் காந்தி, விஜய்-யின் நெருங்கிய நண்பர்கள் (நடிகர்கள், நடிகைகள்) அழைக்கப்படுவார்கள். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் துவங்கப்பட்டு உள்ளது.

Vijay TVK Vijay to take oath as Tamil Nadu CM tomorrow Nehru Indoor Stadium swearing-in Vijay first signature 3 schemes 6 free LPG cylinders per year women rights amount increased to 2500 8 grams gold silk saree marriage scheme TVK 120 MLA support Congress CPI CPM VCK support to Vijay Tamil Nadu government formation 2026 Vijay women welfare jackpot TVK first day announcements Vijay CM oath ceremony free gas cylinder scheme Vijay Tamil Nadu women empowerment schemes Vijay mega welfare plans 3 6 2500 8 120 2026

கடைசி நேர ட்விஸ்ட்

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், விசிகா உள்ளிட்ட கட்சிகளின் 120 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் போதுமான பெரும்பான்மை பெற்றார். இதில் விசிக கடைசி நேரத்தில் மின்னஞ்சலில் விஜய்க்கும் ஆளுநர் மாளிகைக்கும் ஆதரவு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மக்கள் எதிர்பார்ப்பு

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், நாளை முதலமைச்சராகப் பதவியேற்கும் நிலையில், அவரது முதல் கையெழுத்து எந்தத் திட்டத்திற்கு என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய் அறிவித்த மூன்று முக்கிய நலத்திட்டங்கள், பதவியேற்புக்கு அடுத்த நாளே செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் திட்டம் - ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்

விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகவும் கவனம் ஈர்த்த வாக்குறுதி இந்தத் திட்டம்தான். தற்போது எரிவாயு சிலிண்டர் விலை 920 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், இல்லத்தரசிகள் மற்றும் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாக வழங்கும் இந்தத் திட்டம், குடும்ப செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விஜய் தனது முதல் கையெழுத்தைப் போடுவார் என்று பலரும் நம்புகின்றனர்.

இரண்டாவது திட்டம் - மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு

தற்போது மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டமும் விஜய்யின் முதல் முடிவுகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உயர்வு பெண்களுக்கு பெரும் நிதி உதவியாக அமையும். இந்தத் தொகை வர்த்தக சந்தைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் நல்ல பலனைத் தரும். இந்த மூன்று திட்டங்களும் பெண்களுக்கு பெரும் ஜாக்பாட் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் பேசி வருகின்றனர்.

மூன்றாவது திட்டம் - 8 கிராம் தங்கம் + பட்டுச் சேலை

பெண்களுக்கான முக்கியத் திட்டங்களில் ஒன்று இது. ஏழைப் பெண்களின் திருமண உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும். இந்தத் திட்டம் திருமணம் செய்து கொள்ளும் ஏழைப் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தற்போது ஒரு பவுன் தங்கம் சுமார் 1,22,000 ரூபாய் வரை இருக்கும் நிலையில், இந்தத் திட்டம் எத்தனை பெண்களுக்கு பலன் அளிக்கும் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்தத் திட்டம் பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் விஜய் அரசுக்கு உள்ளது. ஆனால் இத்திட்டங்களுக்கு தேவையான நிதியை எப்படி உருவாக்கப் போகிறது என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+