டெல்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சர்க்கரை விலை சில்லறை வர்த்தகத்தில் சுமார் 40% வரை உயர்ந்து நுகர்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓணம், தீபாவளி மற்றும் ரக்சா பந்தன் போன்ற பண்டிகைகள் காரணமாக சர்க்கரைக்கான தேவை உச்சத்தில் இருக்கும் வேளையில் இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது.
சர்க்கரை விற்பனையில் உலக அளவில் டாப் 1- 2 இடங்களில் எப்போதும் இந்தியா இருக்கும். இந்த வருடமும் அப்படி உபரி உற்பத்தி இருக்கும் என்று கணிக்கப்பட்ட ஒரு சூழலில் இருந்து, நாடு கடுமையான சர்க்கரை தட்டுப்பாட்டை நோக்கி நகர்ந்திருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
2025 அக்டோபர் 1 அன்று தொடங்கிய சர்க்கரைப் பருவத்தின் தொடக்கத்தில், உற்பத்தி அபரிமிதமாக இருக்கும் என்று அரசு மற்றும் சர்க்கரை ஆலைகள் எதிர்பார்த்தன. இந்திய சர்க்கரை மற்றும் உயிரி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கம் தனது ஆரம்பக்கட்ட கணிப்பில் 34.90 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகும் எனத் தெரிவித்தது. இதனால் விவசாயிகள் மற்றும் ஆலைகளின் நலன் கருதி அரசு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. அதன்படி நவம்பரில் 1.5 மில்லியன் டன்னும், பிப்ரவரியில் 5 லட்சம் டன்னும் ஏற்றுமதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல நிலைமை தலைகீழாக மாறியது. பிப்ரவரியில் உற்பத்தி கணிப்பு 32.4 மில்லியன் டன்னாகவும், ஏப்ரலில் 32 மில்லியன் டன்னாகவும் குறைக்கப்பட்டது. தற்போது அரசின் கணிப்பின்படி உற்பத்தி 30.6 மில்லியன் டன்னாக மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது. இதில் எத்தனால் தயாரிப்புக்கு 2.9 மில்லியன் டன் பிரிக்கப்பட்டு, ஏற்றுமதியும் போக உள்நாட்டு பயன்பாட்டிற்கு 26.9 மில்லியன் டன் மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால் நாட்டின் சராசரி நுகர்வு 28.5 மில்லியன் டன்னாக உள்ளது. உற்பத்தி சரிவு மற்றும் பண்டிகைக் கால தேவை அதிகரித்ததன் எதிரொலியாக சந்தையில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்தது. மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஜூலை இறுதியில் உயரத் தொடங்கிய ஆலை விலை, ஆகஸ்ட் தொடக்கத்தில் 100 கிலோவுக்கு ரூ.4,880 - ரூ.4,980 வரை உயர்ந்தது. ஆகஸ்ட் 18 அன்று ரூ.5,350 ஆகவும், அடுத்த நாளே உத்தரப் பிரதேசத்தில் ரூ.5,850 ஆகவும் எகிறியது. கர்நாடகாவில் சில ஆலைகளில் 100 கிலோ சர்க்கரை ரூ.7,100 வரை விற்கப்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டது. திடீர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது: சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டது. கரும்பு சாற்றிலிருந்து எத்தனால் தயாரிப்பதுதான் விலையேற்றத்திற்குக் காரணம் என்ற வாதத்தை மத்திய அரசு மறுத்துள்ளது. கடந்த 2022-23ல் 12% ஆக இருந்த சர்க்கரை பயன்பாடு தற்போது 9% ஆகக் குறைந்துள்ளது என்றும், எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளம் போன்ற தானியங்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பெய்த அதிக மழை வெள்ளம், பயிர் நோய்கள் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகாவில் போதிய மழையின்மை ஆகிய இயற்கை காரணிகளே உற்பத்தி வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன. தற்போது இந்தியாவில் எஞ்சி இருக்கும் சர்க்கரை இருப்பு சுமார் 3.2 மில்லியன் டன்னாகக் குறையக்கூடும். இது கடந்த 20 வருடங்களில் மிகக் குறைந்த அளவாகும். அடுத்த பருவத்திற்கான கரும்பு விளைச்சலும் மழைக் குறைவால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. அடுத்த ஆண்டின் உற்பத்தி 29 மில்லியன் டன்னாகக் குறைய வாய்ப்புள்ளதால், அரசு கையிருப்பை பலப்படுத்தவும் நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.தட்டுப்பாடு காரணம்
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட ஆலை விலைகள்
அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள்
செப்டம்பர் முதல் பெரிய தொழில்துறை நிறுவனங்கள் 15 நாட்களுக்கு மேல் சர்க்கரை இருப்பு வைத்திருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
உள்நாட்டு விநியோகத்தை சீராக்க, சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு 100% இறக்குமதி வரியை நீக்கி, 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய ஆகஸ்ட் 20 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.எத்தனால் பங்களிப்பு
காத்திருக்கும் சவால்