துபாயில் சுட்டெரிக்கும் வெயில்: 700 தொழிலாளர்களுக்கு குளிர்பானம்.. நெகிழ்ச்சி தந்த ‘கிரீன் குளோப்’

  • துபாய்: தொடர்ந்து பல ஆண்டுகளாக தொழிலாளர் நலன் சார்ந்த மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும், சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கிரீன் குளோப் அமைப்பின் சார்பாக, "கூலிங் ஹார்ட்ஸ் - இதயங்களை குளிர்வித்தல்" ஐந்தாம் பகுதி நிகழ்ச்சி 19.09.2026 சனிக்கிழமை காலை 11 மணியளவில் துபாய் நாத் அல் சபா பகுதியில் உள்ள ஒரு கட்டுமான வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

    Advertisement

    இந்நிகழ்வின் மூலம் சுமார் 700 தொழிலாளர்களுக்கு தண்ணீர், லபான், ஆப்பிள், பிஸ்கட், பழச்சாரு, பழங்கள் உள்ளிட்ட சிற்றுண்டித் தொகுப்புகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.

    Advertisement

    இந்நிகழ்வை கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்கள் ரசூல், சாபீர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். மேலும், பல்வேறு தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

    வெயிலிலும் கடினமான சூழலிலும் உழைக்கும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு , கடும் வெயில் முடிவுக்கு வரும் தருவாயில் இவ்வருடத்தின் நிறைவு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட இந்த மனிதநேயப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    English Summary

    Dubai Heat Relief: Green Globe Distributes Refreshments to 700 Construction Workers in Inspiring Initiative