சவுதி அரேபியா இனி வேண்டாம்.. உடனே வெளியேறுங்க.. தூதரக ஊழியர்களுக்கு அமெரிக்கா போட்ட உத்தரவு

  • துபாய்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் உள்ள தூதரகத்திற்கு முக்கிய அறிவுரையை அமெரிக்க வெளியுறவுத்துறை வழங்கி உள்ளது.

    Advertisement

    சவுதி அரேபியா மீது ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது.

    Advertisement

    அதேபோல் சவுதி அரேபியாவின் பிற விமான நிலையங்கள், சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை 21 பேர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

    தற்போது இந்த தாக்குதல் விரிவடைந்துள்ளது. இன்று காலையில் ஹவுதிகள் சார்பில் தம்மம் நகரில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதோடு, 8 பேர் காயமடைந்துள்ளனர்.

    அதன்படி சவுதி அரேபியா மீது ஹவுதிகளின் தாக்கதலகள் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் தேவையை விட கூடுதலாக இருக்கும் தூதரக ஊழியர்கள், அமெரிக்காவை சேர்ந்த பிற அரசு பணியாளர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல் அமெரிக்கர்கள், சவுதி அரேபியாவிற்கு செல்லும்முன் யோசிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பில், ''ஈரான் ஆதரவு ஹவுதிகள், சவுதி அரேபியாவிற்கு எதிராக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் விமான நிலையங்கள், பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் பயண பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. தற்போது நடக்கும் இந்த போர் நடவடிக்கைகள் இன்னும் விரைவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சவுதி அரேபியாவிற்கு செல்வதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The Houthis continue to carry out attacks on Saudi Arabia, and the frequency of these assaults is on the rise, causing the situation to deteriorate. Against this backdrop, the U.S. State Department has issued important guidance to its diplomatic mission in Saudi Arabia.