முத்தம் கொடுக்க போன இளைஞருக்கு முன்னாள் காதலி கொடுத்த தண்டனை.. ஐயோ நாக்கு போச்சே

Subscribe to Oneindia Tamil

லக்னோ: குளத்து கரைக்கு சென்ற முன்னாள் காதலியை ஃபாலோ செய்த 35 வயது திருமணமான இளைஞர் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். அப்போது டென்ஷனான முன்னாள் காதலி அவரது நாக்கை கடித்தார். இதில் நாக்கின் ஒரு பகுதி துண்டான நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சாம்பி. இவருக்கு வயது 35. திருமணம் ஆனவர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்ப்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேச தொடங்கி உள்ளனர். இது சாம்பிக்கு காதலாக மாறியது.

love crime kiss

இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மாப்பிள்ளையும் அமைந்தது.

இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை சாம்பியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. திருமணத்தை நிறுத்தும்படி இளம்பெண்ணிடம் அவர் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

அதோடு அந்த இளம்பெண், சாம்பியை விட்டு விலகினார். அவருடனான தொடர்பை முற்றிலுமாக தவிர்த்தார். இதனால் சாம்பி மனஉளைச்சலுக்கு ஆளானார். மேலும் இளம்பெண்ணை சந்திக்க அவர் அடிக்கடி முயன்றார். ஆனால் இளம்பெண் அவரை சந்திக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் அருகே உள்ள குளத்துக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மட்டும் தனியாக சென்றார். இதனை பார்த்த சாம்பி அவரை பின்தொடர்ந்து சென்றார். மேலும் சுற்றி பார்த்த சாம்பி, யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டதோடு, இளம்பெண்ணை கட்டியணைத்தார். இதில் ஷாக்கான இளம்பெண் தன்னை விடும்படி அவரிடம் கெஞ்சினார். ஆனால் சாம்பி விடவில்லை. அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமான இளம்பெண்ணை அவரை விட்டு விலகி செல்ல முயன்றார். ஆனால் சாம்பியின் பிடியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. இந்த வேளையில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சாம்பி முயன்றார். அப்போது கோபமான இளம்பெண் சாம்பியின் நாக்கை கடித்து வைத்தார். ரத்தம் கொட்டியதோடு, வலி தாங்க முடியாமல் சாம்பி அலறினார். இதையடுத்து இளம்பெண் அங்கிருந்து ஓடினார். நாக்கில் காயம் ஏற்பட்டதால் சாம்பில் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி போலீஸ் துணை கமிஷனர் தினேஷ் திரிபாதி கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக சாம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணையை தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+