1,500 பெண்களுக்கு சுய தொழில் கற்று கொடுக்கும் அதானி! டாக்டர் பிரிதி அதானியின் ஸ்வாபிமான் விஷன்

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில், அதானி அறக்கட்டளை 'அதானி விகாஸ் கேந்திரா'வை தொடங்கியுள்ளது. இது சுமார் 1,500 கிராமப்புறப் பெண்களுக்குத் தையல் பயிற்சி, உள்ளூர் வேலைவாய்ப்புகள் மூலம் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்கித் தரவுள்ளது.

48,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில் 600 நவீன தையல் இயந்திரங்கள் உள்ளன. பயிற்சி மற்றும் உற்பத்தி மையமாக செயல்படும் இது, திறன் மேம்பாட்டைச் சந்தை வாய்ப்புகளுடன் இணைக்கிறது. ப்ரீத்தி அதானியின் திட்டத்தின்படி, சுவாபிமான் திட்டத்தின் கீழ் பெண்கள் கண்ணியமான வாழ்வாதாரத்தைப் பெறுவர்.

Adani Swabhimaan Expands In Madhya Pradesh With New Livelihood Centre For Rural Women

இம்மையத்தை ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். 5,000க்கும் மேற்பட்ட பெண்களிடையே உரையாற்றிய அவர், "உள்ளூர் திறன்களைப் பெரிய சந்தைகளுடன் இணைத்து, பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க இம்மையம் உதவும்" என்றார். இத்தகைய முன்னெடுப்புகள் கிராமப்புறங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

அறக்கட்டளையின் சுவாபிமான் திட்டம், இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் பெண்களுக்கு நிலைத்த வாழ்வாதாரங்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. படர்வாஸ் பகுதியில் இத்திட்டம், குடும்ப வருமானத்தை மேம்படுத்தி, சீரற்ற வேலைவாய்ப்பைக் குறைத்து, உள்ளூர் வாய்ப்புகள் மூலம் புலம்பெயர்வதைத் தடுக்கும்.

அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். அபிஷேக் லக்தாகியா இது குறித்து குறிப்பிடுகையில், "இத்திட்டம் திறன் உருவாக்குதலுடன் உண்மையான வேலைவாய்ப்பை ஒருங்கிணைத்து, பெண்கள் கண்ணியத்துடன் சம்பாதிக்க உதவுகிறது. இது குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்களின் நிதி சுதந்திரத்தையும் பங்கையும் வலுப்படுத்தும்" என்றார்.

கட்டமைப்பு வசதிகள், பயிற்சி, சந்தை அணுகலில் கவனம் செலுத்தும் இம்முயற்சி, பெண்களுக்கு நிலையான பொருளாதார சூழலை உருவாக்கும் நீண்டகால திட்டத்தின் முக்கிய அங்கமாகும். அதானி அறக்கட்டளை தனது 30வது ஆண்டு நிறைவை நெருங்கும் இத்தருணத்தில், 30 ஆண்டுக்கால சமூக மேம்பாட்டுப் பணிகளை இந்த விரிவாக்கம் அடையாளப்படுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+