அசாம்: பிஜேபி 39 இடங்களில் முன்னிலை.. ஹிமந்தா பிஸ்வா சர்மா பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

Subscribe to Oneindia Tamil

அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜலுக்பாரி தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 4,500 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். இது அவரது தொகுதியில் பாஜகவுக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி பாஜக 39 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. இந்த ஆரம்பப் போக்கு NDA கூட்டணிக்கு சாதகமாக இருப்பது மட்டும் அல்லாமல் ஆட்சி அமைக்க தேவையான 64 இடங்களை காட்டிலும் அதிகமான இடத்தில் முன்னிலை வகிக்கும் காரணத்தால் ஹிமந்தா பிஸ்வா சர்மா 3வது முறையாக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Assam election politics 2026 19 NDA Assam Election 2026 Live Results Himanta Biswa Sarma Lead BJP Leading 19 Seats Assam Vote Counting Trends NDA Lakhimpur Dominance assam assembly election 2026 live results himanta biswa sarma leading 4500 votes bjp leads 19 seats assam jalukbari himanta lead hojai bjp shiladitya deb lead binnakandy agp leading nda leads 5 constituencies lakhimpur assam election early trends 2026 bihpuria naobaicha ranganadi lakhimpur dhakuakhana nda assam bjp agp bopf early results assam election may 4 updates himanta biswa sarma jalukbari constituency assam 28 seats counted results bjp 19 leading assam polls assam election 2026 party wise leads 2026 4500 19 AGP 5 NDA 2026 AGP BOPF 4 28 19 2026

கட்சி வாரியான நிலவரம்

அசாம்-ன் 126 தொகுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. போடோலாந்த் பீப்பிள்ஸ் ஃபிரண்ட் (BOPF) 6 தொகுதிகளிலும், அசம் கணா பரிஷத் (AGP) 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்திய தேசிய காங்கிரஸ் (INC) 11 தொகுதிகளிலும், அசம் ஜாதிய பரிஷத் மற்றும் ஆல் இந்திய யுனைட்டட் டெமாக்ரடிக் ஃபிரண்ட் (AIUDF) ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் 63 தொகுதிகளின் ஆரம்ப நிலவரத்தை பார்க்கும் போது NDA கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.

ஹோஜாய் (Hojai) தொகுதி

ஹோஜாய் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷிலாதித்யா தேவ் 6,996 வாக்குகளைப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜில்லி சௌத்ரி 2,484 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இங்கு பாஜக 4,512 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

பின்னகண்டி தொகுதி

பின்னகண்டி தொகுதியில் AGP வேட்பாளர் ரெஜவுல் கரீம் சௌத்ரி 3,681 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். AIUDF தலைவர் பத்ருதீன் அஜ்மல் 2,650 வாக்குகளைப் பெற்றுள்ளார். மற்றொரு AGP வேட்பாளர் ஷாஹபுதீன் மஜும்தார் 1,117 வாக்குகளுடன் உள்ளார். இங்கு AGP 31 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. இந்த ஆரம்பப் போக்கு AGP-வுக்கு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளது.

லகிம்பூர் மாவட்டத்தில் NDA 5 தொகுதிகளில் முன்னிலை

லகிம்பூர் மாவட்டத்தில் NDA கூட்டணி 5 தொகுதிகளில் வலுவான முன்னிலை வகிக்கிறது. பிஹ்பூரியா, நவோபைச்சா, ரங்கனதி, லகிம்பூர் மற்றும் தாகுவாகனா ஆகிய தொகுதிகளில் NDA வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் NDA-வின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது.

இன்று தொடங்கியுள்ள வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் வரை யார் ஆட்சியை பிடிப்பது என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இது ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம் மட்டுமே என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

முழு முடிவுகள் வெளியான பிறகே அசாம் அரசியல் எதிர்காலம் தெளிவாகும். தற்போதைய போக்கு NDA கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், மீதமுள்ள தொகுதிகளின் முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+