அசாமில் பிஜேபி முன்னிலை.. தபால் வாக்கு எண்ணிக்கையில் நினைத்தது அப்படியே நடக்குது!

Subscribe to Oneindia Tamil

அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தபால் வாக்கு எண்ணிக்கை குறித்த நேரத்தில் சரியாக 8 மணிக்கு துவங்கியது. மொத்தம் 126 தொகுதிகளில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையில் பிஜேபி முன்னிலை வகிக்கிறது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (CONG+) 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் எந்தத் தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.

2026 NDA Assam Election 2026 Live Results NDA Leading Assam Polls BJP Third Term Assam Assam Vote Counting Trends Postal Ballots Assam assam assembly election 2026 live results nda leads 6 out of 8 seats assam assam election early trends 2026 bjp third term assam polls assam postal ballots counting assam election majority 63 seats nda vs cong assam 2026 assam election 2021 results comparison himanta biswa sarma third term assam vote counting update today assam election nda 6 leads congress alliance 2 leads assam assam 126 seats election results assam election live updates may 4 assam nda landslide prediction 2026 nda 8 6 63 nda vs 2021 nda 6 2 126 4 nda

2021 தேர்தல் முடிவுகளுடன் ஒப்பீடு

2021 சட்டமன்றத் தேர்தலில் NDA 73 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களையும், பிற கட்சிகள் 23 இடங்களையும் பெற்றன. இந்த முறை தபால் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப கட்டத்தில் NDA கூட்டணி வலுவாக உள்ளதை பார்க்கும் போது 2021-ல் பெற்ற வெற்றியையும், எக்சிட் போல் கணிப்பையும் நினைவூட்டுகிறது. இருப்பினும், முழு முடிவுகள் வெளியாகும் வரை இறுதி முடிவுக்கு வர முடியாது.

புதிய அரசு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள்

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், புதிய அரசு அசாம் பொருளாதாரத்தில் உள்ளத குறைந்த வருமானமும் அதீத வளர்ச்சி அளவீடுகளில் உள்ள முரண்பாடுகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதுய அசாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.6.4 லட்சம் கோடியாக உள்ளது.

ஆனால் தனிநபர் வருமானம், மனித வளர்ச்சி குறியீடு ஆகியவை தேசிய சராசரியை விட குறைவாக உள்ளன. பொது கடன் அதிகரிப்பு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, விவசாயத்தின் பலவீனம் போன்ற பிரச்சினைகளும் உள்ளன. இந்தப் பொருளாதார நிலைமையை சமாளிப்பது புதிய அரசின் முக்கிய சவாலாக இருக்கும்.

மொத்தம் 126 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கை மட்டுமே தற்போது நடைபெற்று வகுகிறது. அதை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+