தமிழ்நாட்டில் வலிமையடைந்த என்.டி.ஏ கூட்டணி.. ஒரு குடைக்குள் வந்த டாப் கட்சிகள்.. திமுகவிற்கு சிக்கல்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய உதேவகத்தை கொடுத்து உள்ளது.
மதுராந்தகத்தில் விஸ்வரூபம் எடுத்த என்.டி.ஏ கூட்டணி
பிரதமர் மோடி பங்கேற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் கைகோர்த்து நின்றது 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. என்டிஏ கூட்டணியின் இந்த ஒற்றுமை ஆளும் திமுக தரப்பிற்கு தேர்தல் நேரத்தில் சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

மெகா கூட்டணியின் பலப்பரிட்சை
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முறையாகத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், தற்போதைய என்.டி.ஏ கூட்டணி ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்த மேடையில் இடம் பெற்ற முக்கியக் கட்சிகள் மற்றும் தலைவர்கள்,
- அதிமுக தலைவர், எடப்பாடி பழனிச்சாமி
- பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், அன்புமணி ராமதாஸ்
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர், டிடிவி தினகரன்
- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி கே வாசன்
- இந்திய ஜனநாயக கட்சி தலைவர், பாரிவேந்தர்
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர், ஜான் பாண்டியன்
- தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர், திருமாறன்
- புரட்சி பாரதம் கட்சித் தலைவர், ஏசி சண்முகம்.
- புரட்சி பாரதம் கட்சி தலைவர், ஜெகன்மூர்த்தி
ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி
குறிப்பாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக ஏட்டியும் போட்டியுமாக இருந்த இ.பி.எஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இரு துருவங்களையும், பாஜக தலைமை சமாதானப்படுத்தி ஒரே மேடைக்குக் கொண்டு வந்துள்ளது. இது ஜெயலலிதாவின் விசுவாசிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்: திமுகவிற்கு நெருக்கடி
மதுராந்தகம் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை மிகக்கடுமையாக சாடினார். திமுக அரசை 'CMC' அரசு என்று கடுமையாக குறிப்பிட்டார்.
"திமுக என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு CMC (Corruption, Mafia, Crime) - ஊழல், மாஃபியா மற்றும் குற்றங்களின் கூடாரம். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை போதைப்பொருள் கலாச்சாரம் மூலம் சீரழித்து வரும் இந்த அரசுக்கு, 2026-ல் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்," என்று பிரதமர் மோடி மேடையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் தனது உரையில் முன்வைத்த மத்திய அரசின் முக்கிய சாதனைகள்:
நிதி ஒதுக்கீடு: கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ₹11 லட்சம் கோடி வரி பகிர்வு மற்றும் இதர நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இது காங்கிரஸ்-திமுக கூட்டணி (UPA) காலத்தில் வழங்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம்.
ரயில்வே வளர்ச்சி: தமிழக ரயில்வே திட்டங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன்: பிஎம்-கிசான் (PM-Kisan) திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே நேரடியாக நிதி சென்றடைகிறது; இதில் கமிஷன் அடிக்க திமுகவுக்கு வழியில்லாமல் போய்விட்டது.
EPS - TTV இணைந்த மாபெரும் சக்தி: தொண்டர்கள் உற்சாகம்
தமிழக அரசியலில் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இடையிலான அந்த இணக்கமான சூழல், மேடையில் வெளிப்பட்ட விதம் தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தலைவர்களின் ஒற்றுமை, இருவருக்கும் இடையிலான கைகுலுக்கல் திமுகவிற்கு இப்போதே பிரஷர் ஏற்றியுள்ளது. முக்கியமாக பிளவுபட்டு இருந்த அதிமுக ஆதரவு வாக்குகள் ஒரு குடைக்கு கீழ் வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கலக்கத்தில் திமுக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த அசுர பலத்தைக் கண்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிலைகுலைந்து போயுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை, திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போவதாக அரசியல் வல்லுனர்கள் விமர்சனங்கள் வைக்கின்றனர்.
மதுராந்தங்கம் கூட்டம் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல முக்கிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் தலைமை மற்றும் தமிழகத் தலைவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பு, 2026-ல் தமிழகத்தில் "சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய உதேவகத்தை கொடுத்து உள்ளது.
மதுராந்தகத்தில் விஸ்வரூபம் எடுத்த என்.டி.ஏ கூட்டணி
பிரதமர் மோடி பங்கேற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் கைகோர்த்து நின்றது 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. என்டிஏ கூட்டணியின் இந்த ஒற்றுமை ஆளும் திமுக தரப்பிற்கு தேர்தல் நேரத்தில் சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
மெகா கூட்டணியின் பலப்பரிட்சை
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முறையாகத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், தற்போதைய என்.டி.ஏ கூட்டணி ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்த மேடையில் இடம் பெற்ற முக்கியக் கட்சிகள்:
- அதிமுக (எடப்பாடி பழனிசாமி தலைமையில்)
- பாஜக (நயினார் நாகேந்திரன் தலைமையில்)
- அமமுக (டி.டி.வி. தினகரன்)
- பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு)
- தமாகா (ஜி.கே. வாசன்)
- ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி
குறிப்பாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக ஏட்டியும் போட்டியுமாக இருந்த இ.பி.எஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இரு துருவங்களையும், பாஜக தலைமை சமாதானப்படுத்தி ஒரே மேடைக்குக் கொண்டு வந்துள்ளது. இது ஜெயலலிதாவின் விசுவாசிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்: திமுகவிற்கு நெருக்கடி
மதுராந்தகம் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை மிகக்கடுமையாக சாடினார். திமுக அரசை 'CMC' அரசு என்று கடுமையாக குறிப்பிட்டார்.
"திமுக என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு CMC (Corruption, Mafia, Crime) - ஊழல், மாஃபியா மற்றும் குற்றங்களின் கூடாரம். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை போதைப்பொருள் கலாச்சாரம் மூலம் சீரழித்து வரும் இந்த அரசுக்கு, 2026-ல் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்," என்று பிரதமர் மோடி மேடையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் தனது உரையில் முன்வைத்த மத்திய அரசின் முக்கிய சாதனைகள்:
நிதி ஒதுக்கீடு: கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ₹11 லட்சம் கோடி வரி பகிர்வு மற்றும் இதர நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இது காங்கிரஸ்-திமுக கூட்டணி (UPA) காலத்தில் வழங்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம்.
ரயில்வே வளர்ச்சி: தமிழக ரயில்வே திட்டங்களுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன்: பிஎம்-கிசான் (PM-Kisan) திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கே நேரடியாக நிதி சென்றடைகிறது; இதில் கமிஷன் அடிக்க திமுகவுக்கு வழியில்லாமல் போய்விட்டது.
EPS - TTV இணைந்த மாபெரும் சக்தி: தொண்டர்கள் உற்சாகம்
தமிழக அரசியலில் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இடையிலான அந்த இணக்கமான சூழல், மேடையில் வெளிப்பட்ட விதம் தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தலைவர்களின் ஒற்றுமை, இருவருக்கும் இடையிலான கைகுலுக்கல் திமுகவிற்கு இப்போதே பிரஷர் ஏற்றியுள்ளது. முக்கியமாக பிளவுபட்டு இருந்த அதிமுக ஆதரவு வாக்குகள் ஒரு குடைக்கு கீழ் வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கலக்கத்தில் திமுக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த அசுர பலத்தைக் கண்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிலைகுலைந்து போயுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை, திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போவதாக அரசியல் வல்லுனர்கள் விமர்சனங்கள் வைக்கின்றனர்.
மதுராந்தங்கம் கூட்டம் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல முக்கிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் தலைமை மற்றும் தமிழகத் தலைவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பு, 2026-ல் தமிழகத்தில் "இரட்டை எஞ்சின்" ஆட்சியை உறுதி செய்யும் என்று என்.டி.ஏ கூட்டணியினர் நிமிர்ந்து நிற்க தொடங்கி உள்ளனர்.
இரட்டை எஞ்சின்" ஆட்சியை உறுதி செய்யும் என்று என்.டி.ஏ கூட்டணியினர் நிமிர்ந்து நிற்க தொடங்கி உள்ளனர்.

Click it and Unblock the Notifications