தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்! போடும் "சென்டிமென்ட்" நாடகம்.. திட்டவட்டமாக பதிலடி தரும் இந்தியா
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை சர்வதேச அளவில் ஒரு விவாதமாக மாற்றப் பாகிஸ்தான் முயன்று வருகிறது. பாகிஸ்தான் ஏதோ பாதிக்கப்பட்ட நாடு போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், இந்தியாவின் நிலைப்பாடோ மிகத் தெளிவானது.. "ரத்தமும் நீரும் ஒரே பாதையில் ஓட முடியாது!" என்பது தான் அது.!
கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல்களை நடத்தினார். இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் அரங்கேறிய மிக மோசமான ஒரு பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இந்தியாவின் அதிரடி முடிவு
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் சதி அம்பலமானது. இதற்குப் பதிலடியாக, 1960ம் ஆண்டு நேரு மற்றும் அயூப் கான் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பலமுறை எச்சரித்தும் வேண்டும் என்றே எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாட்டிற்கு எப்படி தண்ணீரை வழங்க முடியும் என்பதே இந்தியாவின் ஒரே கேள்வியாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ஏதோ தன்னை பாதிக்கப்பட்ட ஒரு நாடு போலச் சித்தரிக்க முயல்கிறது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலில் அமைதிப் பேச்சுவார்த்தையாளராகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் பாகிஸ்தான், அதே சமயம் நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச லாபிகளைப் பயன்படுத்தி வருகிறது..
சர்வதேச அளவில் கேம்
லண்டனைச் சேர்ந்த சதாம் ஹவுஸ் என்ற சிந்தனைக் குழு, பஹல்காம் தாக்குதலை வெறும் 'மிலிட்டண்ட் அட்டாக்' என்று மட்டும் குறிப்பிட்டு, பயங்கரவாதம் என்ற சொல்லையே தவிர்த்துள்ளது. இதனை இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த 'டான்' மற்றும் 'பாகிஸ்தான் டுடே' போன்ற இதழ்கள், சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என சென்டிமென்ட் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
மிக தெளிவாக இருக்கும் இந்தியா
இருப்பினும், இந்தியா இந்த விவகாரத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது.. ஐநா சபையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அதாவது ஐநா சபையில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பி.ஹரிஷ், "பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டிற்கு, இந்தியாவின் பெருந்தன்மையால் போடப்பட்ட 80 சதவீத நீர் பகிர்வு ஒப்பந்தம் இனி பொருந்தாது. மனித உயிர்களின் புனிதத்தைப் பாகிஸ்தான் மதிக்காத வரை ஒப்பந்தம் குறித்துப் பேச இடமில்லை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் சூழல்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால், பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி மட்டுமல்லாது, சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலம் நெருங்கி வரும் வேளையில், நீரின் தேவை அதிகரிக்கும் போது பாகிஸ்தானுக்கு அழுத்தம் இன்னும் கூடும். பாகிஸ்தான் தன்னை ஒரு அமைதி விரும்பியாகக் காட்டிக் கொள்ள முயன்றாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை இந்தியா இறங்கி வராது என்பது உறுதி.
பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டு, நீருக்காகக் கையேந்துவது பாகிஸ்தானின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காத வரை, பாகிஸ்தானின் விக்டிம் கார்டு இந்தியாவிடம் எடுபடாது!












Click it and Unblock the Notifications