நள்ளிரவில் பண்ணை வீட்டில் அழகி பண்ண வேலை! நாயால் அம்பலமான ரகசியம்! பிரேசிலை மிரட்டிய பியூட்டி குயின்
பிரேசிலியா (Brasília) பிரேசில் நகரையே உலுக்கியுள்ள ஒரு கடத்தல் விவகாரத்தில், அந்நாட்டின் முன்னாள் உலக அழகி ஒருவர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு "யூபர்லாண்டியா உலக அழகி" (Miss Uberlândia) பட்டம் வென்ற 36 வயதான சாரா மான்டீரோதான் இப்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள அந்தப் பெண். இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரு பிரபலம், இவ்வளவு பெரிய கடத்தல் சாம்ராஜ்யத்தின் பின்னணியில் இருப்பார் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
சாரா மான்டீரோ என்பவர் பிரேசில் நாட்டில் ரொம்பவே ஃபேமஸ்.. மிகப்பெரிய அழகி என்பதையும் தாண்டி, தனது சமூக வலைதளப் பக்கங்களில் கண்ணைப் பறிக்கும் ஆடம்பரத்தை காட்டி வந்தார்.

பிரேசில் அழகி காஸ்ட்லி லைஃப்
அளவுக்கு அதிகமான ஆடம்பர பிரியை.. எப்போதுமே காஸ்ட்லி கார்கள், பிரம்மாண்டமான கப்பல் பயணம், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா என்று ஒரு ராஜவாழ்க்கை வாழ்ந்து வருபவர் இந்த பெண்..
ஆனால் இத்தனை திரைமறைவு விஷயங்களையும் சீக்ரெட்டாக வைத்து, வெளியில் தெரிவதற்காகவே பெயருக்கு ஒரு துணிக்கடையையும் அவர் நடத்தி வந்தார்.
ஆனால், அந்த ஒரேயொரு கடையை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய சொகுசு வாழ்க்கை எப்படி வாழ முடிகிறது? என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்தது. அதனால் அந்த பெண்ணை, ரகசியமாகக் கண்காணிக்க துவங்கினார்கள்.. இதற்காக "ஆபரேஷன் லக்சரி" என்ற திட்டத்தையும் அதிகாரிகள் கையில் எடுத்தனர்.
உலக அழகியை சிக்க வைத்த நாய்
இந்த ரகசிய விசாரணையில், ஏகப்பட்ட அதிரடி உண்மைகள் வெளிவந்தன. அதாவது, சாரா மான்டீரோ ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. சாவ் பாலோ உட்பட 3 முக்கியமான பகுதிகளில் இந்தக் கும்பல் கஞ்சா கடத்தல் மற்றும் பணமோசடி தொழிலில் ஈடுபட்டு வருவதும், அந்த கடத்தல் கும்பலுக்கும், அவர்கள் மூலம் வரும் பணத்தைப் பதுக்குவதற்கும் சாரா, மிகப்பெரிய பாலமாக இருந்துள்ளார்.
எனினும் சாரா பற்றி, இன்னும் அதிகமான ஆதாரங்களை சேகரிக்க முயன்றார்.. ஒருநாள், போதைப்பொருள் பதுக்க பயன்படுத்தப்படும் ஒரு பண்ணை வீட்டின் அருகே சாரா தனது நாயுடன் வாக்கிங் போனாராம்.. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரைத் ரகசியமாக கண்காணித்து ஆதாரங்களைத் திரட்டினர்.
சொகுசு கார்கள் - கப்பல் பயணம்
அந்த ஒரு வாக்கிங் தான் சாராவுக்கும், அந்த கடத்தல் கும்பலுக்கும் உள்ள தொடர்பை அப்பட்டமாகப் போட்டுக்கொடுத்தது. அதன் பிறகு சாவ் பாலோ நகரில் வைத்து அவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
உடனடியாக சாரா குறித்த விசாரணை மற்றும் சோதனைகளை கையில் எடுத்தனர்.. அப்போது அந்த சோதனையின் போது அதிகாரிகளே வாயடைத்துப் போய்விட்டார்களாம். சுமார் 5.9 டன் எடையுள்ள கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமில்லாமல், கடத்தல் பணத்தில் வாங்கப்பட்ட சுமார் 20 விலை உயர்ந்த சொகுசு கார்களையும் போலீசார் தூக்கினார்கள். இந்த வழக்கில் சாராவோடு சேர்த்து மொத்தம் 24 பேர் இதுவரை கைதாகியுள்ளனர்.
பிரபல மாடல் சாரா கைது
கைதான சாரா மற்றும் அந்த 24 பேரிடமும் சாவ் பாலோ போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் இன்னும் பெரிய தலைகள் யாராவது சிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இன்ஸ்டாகிராமில் சாரா காட்டிய அந்த ஆடம்பர வாழ்க்கை, போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வந்தது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. அதுமட்டுமல்ல, அழகும் புகழும் இருந்தும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக, இத்தனை தில்லாலங்கடி வேலைகளை, பிரபல அழகி செய்துள்ளது பிரேசில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறதாம்...!!












Click it and Unblock the Notifications