3 எழுத்து இட்லி நடிகைதான் என் குடும்பத்தை கெடுத்தார்! அந்த பொம்பள.. ஒருமையில் எச்சரித்த ரவி மோகன்
சென்னை: 3 எழுத்து நடிகை, இட்லி நடிகைதான் எனது குடும்பத்தை கெடுத்தார். என்னை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை என நடிகையின் பெயரை குறிப்பிடாமல் ரவி மோகன் விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து ரவிமோகன் கூறியிருப்பதாவது: நான் பேசாமல் இருந்தது முட்டாள்தனம் என நினைக்கிறேன். நான் எப்போதும் விட்டுக் கொடுப்பவன். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது. என்னை சீண்ட நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், என் ஆபிஸுக்கு வந்து பஞ்சிங் பேக்காக யூஸ் செய்துக் கொள்ளுங்கள். மறைமுகமாக வேண்டாம்!

என் படம் இனி தியேட்டரில் ரிலீஸாகாது. என்னால் நடிக்க முடியவில்லை, எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களால் என்னால் தாங்க முடியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை சரியாகும் வரை, சைபர் புல்லியிங் சரியாகும் வரை நான் நடிக்க மாட்டேன். என் அலுவலகத்தில் வந்து சீண்டி பாருங்கள்.
என் பணியை எப்படி சரி செய்வது என்பதை நான் பார்த்துக் கொள்வேன். நான் வாய் மூடி இருந்ததால்தான் என்னை இந்த நிலைக்கு தள்ளினார்கள். 23 ஆண்டுகள் இரவு பகலாக வேலை பார்த்திருக்கிறேன். 95 சதவீதம் படங்கள் வெற்றிப் படங்கள். இதை நானே சொல்லிக் கொள்ளும் போது எனக்கு கேவலமாக இருக்கிறது. எனது சாதனைகள் எனக்கும் எனது ரசிகர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
எனக்கு இரண்டாவது படத்திற்கு மாநில அரசு விருது, கலைமாமணி எல்லாம் வாங்கியிருக்கிறேன். என் தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்டோர்தான் எனக்கு எல்லாமே, என் குடும்பத்தினரை எதுவும் சொல்லக் கூடாது. அவர்களை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன்.
அவன் அமைதியாக இருந்துவிடுவான் என நினைக்கிறார்கள். பெண் என்ற பெயரை சொல்லி தப்புகிறார். பேராண்மையில் பெண்களுக்கான உரிமை குறித்து எனது வசனம் எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மிகப் பெரிய சக்தி, அதை வீணடிக்கக் கூடாது.
என்னுடன் வாழ்ந்த போதெல்லாம் நான் கடவுளாக இருந்தேனா, எத்தனை இன்டர்வியூக்களில் என்னை பெருமையாக பேசியிருக்கிறார், அப்போதெல்லாம் feminism தெரியவில்லையா,
நான் 16 ஆண்டுகள் எதையும் பேசவில்லை. என் குழந்தைகளுக்கு நல்ல லைப் கிடைக்க நான் போராடிக் கொண்டிருக்கிறேன். என் பாசத்தை பற்றி தவறாக பேசாதீர்கள்.
நான் பார்க்காத ஹீரோயினா, என் வேலையை அழகான பெண்களுடன் நடிப்பது, அப்போது தவறு செய்யாத நான் இப்போது வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்து விடுவேனா?
என் குழந்தைகளை பார்க்கக் கூட விடுவதில்லை. ஸ்கூலுக்கு கூட பாடிகார்டை அனுப்பி வைக்கிறார்கள். ஆர்த்தி வேண்டாம் என என் அம்மா, அப்பா எவ்வளவோ சொன்னார்கள். ஆனால் நான்தான் கேட்கவில்லை. என் திருமணத்தில் என் அப்பா, அம்மா அட்சதை போட்டதை பார்த்தீர்கள் என்றாலே தெரியும்.
மூன்றெழுத்து இட்லி நடிகை எனது குடும்பத்தை கெடுத்தார். என்னை பற்றி பேச உனக்கு அருகதை இல்லை. அந்த நடிகையின் ஜெனரேஷனை சேர்ந்த 3 நடிகர்களின் வாழ்க்கையை கெடுக்க வந்ததாக அவர்களே என்னிடம் கூறியிருந்தனர். அப்படி 3 பேரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த அந்த பொம்பளை என் வாழ்க்கையை பற்றி பேசுது என மூன்று எழுத்து நடிகையை ரவி மோகன் ஒருமையில் விமர்சித்தார். அந்த நடிகை குறித்து ரவி மோகன் இத்தனை ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications