அப்பாடா.. ஒரு வழியா வந்தாச்சு அறிவிப்பு! ஆசிரியர்களுக்கு ட்ரான்ஃபர்! வெளியானது கவுன்சிலிங் தேதி!

  • மதுரை: கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் (EMIS) பொதுமாறுதல் கலந்தாய்வு மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கள்ளர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளுக்கு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக வெளியாகியுள அறிவிப்பில்," மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேனிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    Advertisement

    இங்கு பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் / காப்பாளினிகளுக்கும் 2026-2027-ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக (EMIS) 01.07.2026 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் பொதுமாறுதல் கலந்தாய்வு மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பின்வருமாறு நடத்தப்படவுள்ளது.

    1. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் - 02.09.2026
    2. உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் சரக மேற்பார்வையாளர் (பூஜ்ஜிய கலந்தாய்வு) மாறுதல் - 02.09.2026
    3. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் - 02.09.2026
    4. பட்டதாரி ஆசிரியர்கள் (பாடவாரியாக) மாறுதல் - 03.09.2026
    5. பட்டதாரி காப்பாளர் காப்பாளினிகள் மாறுதல் - 03.09.2026
    6. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் - 03.09.2026
    7. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் - 03.09.2026
    8. இடைநிலை காப்பாளர் காப்பாளினிகள் மாறுதல் - 03.09.2026
    9. சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர்) மாறுதல் - 03.09.2026

    Advertisement

    மேலும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் (பாடவாரியாக) மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    EMIS-based general transfer counselling for government Kallar school teachers begins September 2 in Madurai.