66 டாட் பால்கள்.. சேப்பாக்கம் மண்ணில் கொடுமை செய்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்.. குஜராத் அபாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் பவுலர்கள் மொத்தமாக 66 டாட் பால்களை வீசி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரபாடா 15 டாட் பால்களையும், சிராஜ் மற்றும் ஹோல்டர் இருவரும் தலா 14 டாட் பால்களை வீசியுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப சரியான திட்டத்துடன் குஜராத் அணி களமிறங்கியது. சஞ்சு சாம்சனுக்கு அதிக வேகத்தில் பந்துவீசினால், விக்கெட்டை கைப்பற்றிவிடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

CSK

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் மூலமாக சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தினர். அதே திட்டத்தை குஜராத் அணியும் பின்பற்றியது. இதன்பின் வந்த உர்வில் படேல், சர்ஃபராஸ் கான், டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆட வேண்டிய தேவை எழுந்தது.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்துக்கு ஒரு ரன்னை கூட எடுக்காமல், அதிக டாட் பால்களை விளையாடினார். அவருக்கு சிவம் துபே, கார்த்திக் சர்மா உள்ளிட்டோரும் கூட உறுதுணையாக நிற்கவில்லை. அதேபோல் ஆட்டத்தை 20 ஓவர்கள் வரை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது.

கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 74 ரன்களை விளாசினார். மறுபுறம் ரபாடா 3 விக்கெட்டுகளையும், அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் குஜராத் அணியின் பவுலர்கள் மொத்தமாக இந்தப் போட்டியில் 66 டாட் பால்களை வீசி இருக்கின்றனர். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக ரபாடா 15 டாட் பால்களையும், முகமது சிராஜ் மற்றும் ஹோல்டர் ஆகிய இருவரும் தலா 14 டாட் பால்களை வீசினர். அர்ஷத் கான் 13 டாட் பால்களையும், மானவ் சுதார் 9 டாட் பால்களையும், ரஷீத் கான் 1 டாட் பாலையும் வீசி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி மீண்டும் சேப்பாக்கத்தில் ஒரு காடு வளர்த்துவிட்டதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+