9 இன்னிங்ஸில் 37 சிக்ஸ்.. கிறிஸ் கெய்ல் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி.. இதுதான் சம்பவம்!
சண்டிகர்: ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 9 இன்னிங்ஸில் விளையாடியுள்ள மொத்தமாக 37 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இன்னும் 5 இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடவிருக்கும் நிலையில், கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க 23 சிக்சர்களை அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டார் வீரராக வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே உயர்ந்துவிட்டார். வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தையும், அவரின் வளர்ச்சியையும் காண்பதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூட இறங்கி வந்து வைபவ் சூர்யவன்ஷி என்னுடைய ஃபேவரைட் வீரர்கள் பட்டியலில் இணைந்துவிட்டதாக பாராட்டி இருந்தார்.

அதற்கேற்ப பும்ரா, ஹேசல்வுட், அர்ஷ்தீப் சிங், பேட் கம்மின்ஸ் உட்பட அனைத்து ஜாம்பவான் வீரர்களையும் பதம் பார்த்துவிட்டார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி தனது முழு பவரையும் வெளிப்படுத்தி அசத்தினார். யார்க்கர் பந்துகளை கூட சிக்ஸ் அடிக்க முடியும் என்பதை நிரூபித்த போது, பஞ்சாப் அணி வீரர்காளும் கூட ஆச்சரியம் அடைந்தனர்.
அதுமட்டுமல்லாமல் தோனி ஸ்டைலில் சில ஹெலிகாப்டர் ஷாட் சிக்சர்களையும் பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 43 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக 9 இன்னிங்ஸில் ஒரு சதம், 2 அரைசதங்கள் உட்பட 400 ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றி அசத்தி உள்ளார்.
9 இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷி 37 சிக்ஸ், 34 பவுண்டரியை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் அபிஷேக் சர்மா 28 சிக்சர்களுடன் 2வது இடத்திலும், பிரியன்ஷ் ஆர்யா 26 சிக்சர்களுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
இதனால் வைபவ் சூர்யவன்ஷியால் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க முடியும் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் 59 சிக்சர்களை விளாசியதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷி இன்னும் 23 சிக்சர்கள் தேவையாக உள்ளது.
இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி இன்னும் 5 போட்டிகளில் குறைந்தபட்சம் விளையாடுவார். இதன் மூலமாக வைபவ் சூர்யவன்ஷியால் இந்த சாதனையை படைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், வைபவ் சூர்யவன்ஷிக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications