கடைசி பந்து வரை திக் திக்.. ஒரு வழியாக நெஹ்ரா நம்பிக்கையை காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர்!
அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. குஜராத் அணிக்காக கடைசி வரை களத்தில் நின்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஸ்டாய்னிஸ் பந்தில் சிக்ஸ் விளாசி குஜராத் அணியை கரை சேர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய சூர்யான்ஷ் ஷெட்கே 29 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 57 ரன்களை விளாசினார். குஜராத் அணி தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளில் 57 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்து அசத்தினர். கடைசி 2 பந்துகளில் குஜராத் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் சிக்ஸ் அடித்து அசத்தினார். இதன் மூலமாக வாஷிங்டன் சுந்தர் குஜராத் அணியின் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார். ஏனென்றால் இந்த சீசனில் குஜராத் அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாகவே வாஷிங்டன் சுந்தரை நெஹ்ரா பயன்படுத்தி வந்தார். பவுலிங்கில் பங்களிப்பதை விடவும், வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் பங்களிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
ராகுல் டிவாட்டியா, ஷாரூக் கான் உள்ளிட்டோர் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பினர். டாப் 3 பேட்ஸ்மேன்களை வீழ்த்திவிட்டாலே, எளிதாக குஜராத் அணியை வீழ்த்திவிடலாம் என்ற கருத்து நிலவ தொடங்கியது. இதனால் வாஷிங்டன் சுந்தரை நம்பியே நெஹ்ரா பல்வேறு வியூகங்களை வகுத்தார். அவர் கடைசி வரை இன்னிங்ஸை எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி கொண்டே இருந்தார்.
அதற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பலன் கொடுத்துள்ளார். இக்கான சூழலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், நிதானமாக ரன்களை சேர்த்தார். தேவைக்கேற்ப பவுண்டரிகளை மட்டுமே வாஷிங்டன் சுந்தர் விளாசினார். இந்த இன்னிங்ஸ் வாஷிங்டன் சுந்தரின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications