ராஜஸ்தான் அணி கவனமாக இருக்கணும்.. வைபவ் சூர்யவன்ஷியை மும்பை அணி தூக்கிவிடும்.. பிராட் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் போன்ற மிகப்பெரிய அணிகள் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் என்று இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் எச்சரித்துள்ளார். அதனால் ராஜஸ்தான் அணி அடுத்த முறை வைபவ் சூர்யவன்ஷி உடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் போது, அதிக தொகையை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிரடி பேட்டிங் மூலம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இவ்வளவு சிறிய வயதில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் அவரது திறமையைப் பாராட்டியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட், ராஜஸ்தான் அணிக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

Vaibhav Suryavanshi

இதுதொடர்பாக ஸ்டூவர்ட் பிராட் பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்தபோது தனக்குச் சில சந்தேகங்கள் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் சிஸ்டத்தை (Scouting system) நான் பாராட்டுகிறேன். அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது அவருக்கு 14 வயதுதான். இவ்வளவு சிறிய வயதில் ஒரு வீரரை வாங்குவது சற்று விசித்திரமாகத் தெரிந்தது.

அவரை 3 ஆண்டுகள் சும்மா அணியில் வைத்திருப்பார்களோ என்று நினைத்தேன். அவரை 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க முடியாது என்பதால், அவர் ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் போன்ற பெரிய அணிகளுக்கு மாறிவிடுவாரோ என்று நான் யோசித்தேன். ஆனால் ராஜஸ்தான் அவருக்கு உடனடியாக வாய்ப்பளித்தது, அவரும் அதைச் சரியாகப் பயன்படுத்தி இரண்டு அதிவேக சதங்களை அடித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியின் அபார வளர்ச்சியால் மற்ற பெரிய அணிகள் அவரைத் தூக்க முயற்சிக்கும். அதனால் அடுத்த முறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்போது, அவர் அதிக சம்பளம் கேட்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் அவர் மீண்டும் ஏலத்திற்குச் செல்லலாம். அவரைத் தக்கவைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரும் வழிமொழிந்துள்ளார். அவர் பேசுகையில், இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறந்த முதலீடு. ஆனால் அவரைத் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் சரியான தொகையை வழங்க வேண்டியிருக்கும். வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு வீரர் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடிய ஆற்றல் படைத்தவர் என்று புகழ்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+