தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு! சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்! தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை குறித்து பார்க்கலாம். இரு பாலர் பயிலும் பள்ளிகளில் தேர்ச்சி விதகம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Plus 2 results 2026

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடந்தது.

தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டது. இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தில் வெளியானது. அதில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.19 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் மாணவர்களின் தேர்ச்சியை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 3.82 சதவீதம் அதிகம்.

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்

அரசுப் பள்ளிகள்- 92.16 %
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 96.14%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%
இரு பாலர் பள்ளிகள்- 95.30%
பெண்கள் பள்ளிகள்- 97.08 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள்- 90.49%

பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.59 சதவீதம் கூடுதலாகவும் இரு பாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 4.81 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அது போல் இயற்பியலில் 98.87 சதவீதம் பேரும் வேதியியில் 98.82 சதவீதம் பேரும் உயிரியலில் 99.49சதவீதம் பேரும் கணிதத்தில் 99.12 சதவீதம் பேரும் தாவரவியலில் 98.62 சதவீதம் பேரும் விலங்கியலில் 98.69 சதவீதம் பேரும் கணினி அறிவியலில் 99.84 சதவீதம் பேரும் வணிகவியலில் 97.55 சதவீதம் பேரும், கணக்குப் பதிவியலில் 98.04 சதவீதம் பேரும் வரலாறு பாடத்தில் 97.90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+