வேலூரில் 7 அலெக்ஸாண்ட்ரைட் கற்கள்.. இப்போ எங்கே இருக்கீங்க, பேரணாம்பட்டு போலீசுக்கு இங்கேதான் டவுட்

  • வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் 7 அரிய கற்களுடன் சென்ற 58 வயது நபருக்கு வழியில் நடந்த சம்பவம் போலீஸாரையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கற்களை வாங்குவதாக சொன்னவர், அவர் எங்கு செல்கிறார் என்பதை தொடர்ந்து போன் செய்து கேட்டிருக்கிறார். அதன்பிறகு நடந்த சம்பவமும், போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்களும் இந்தக் கற்கள் விவகாரத்தில் அடுத்தடுத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளன...!!!

    Advertisement

    பேரணாம்பட்டு அருகே பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்.. 58 வயதாகிறது.. இவரது மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். கடந்த 7 வருடங்களாகவே கற்களை கைமாற்றி விற்பனை செய்யும் தொழிலில் இருந்து வருகிறார் ஆனந்தகுமார்..

    Advertisement

    வேலூரில் 7 அலெக்ஸாண்ட்ரைட் கற்கள்

    சமீபத்தில் சில புரோக்கர்களை சந்தித்து பேசிய ஆனந்த் குமார், "என்னிடம் சில அரிய கற்கள் இருக்கின்றன.. அவை பட்டை தீட்டப்படாத 7 இயற்கை கற்கள் ஆகும்.. அலெக்ஸாண்ட்ரைட் வகையைச் சேர்ந்த அதிர்ஷ்டக் கற்கள்.. ஜோதிட ரீதியாக பலன்கள் கொண்டவை.. சாதாரண கற்களை போல இல்லாமல், வெளிச்சத்துக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மை கொண்ட மிகவும் அரிய கற்கள்.. இதற்கான சான்றிதழ்களை சென்னையில் உள்ள ரத்தினக்கல் ஆய்வகத்திலும் நான் பெற்றிருக்கிறேன்.. அதனால் இந்த கற்களை நல்ல லாபத்துக்கு விற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.

    Advertisement

    இதையடுத்து, ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற புரோக்கர் மட்டும், அந்த கற்களை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால் கற்களையும் சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு ஆனந்தகுமார் பேரணாம்பட்டு புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றுள்ளார். அங்கு 2 பேரும் சந்தித்துள்ளனர்.

    புரோக்கர் புருஷோத்தமன்

    கற்களை பார்த்த புருஷோத்தமன், அவற்றை பிறகு வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனந்தகுமாரும் அங்கிருந்து பேரணாம்பட்டு பஜாருக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிவிட்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார்.

    அப்போதுதான் புருஷோத்தமனின் போன் வந்துள்ளது. "வீட்டுக்குப் போய்ட்டீங்களா?" என்று கேட்டுள்ளார்.. அதற்கு ஆனந்த்குமார், இதோ, கிளம்பி போய்ட்டு இருக்கேன் என்றாராம்,

    Advertisement

    மறுபடியும் சிறிது நேரம் கழித்து, இபபோ எங்கே இருக்கீங்க? என்று புருஷோத்தமன் கேட்க, ஏரிகுத்தி இடத்தை தாண்டி செல்கிறேன் என்று ஆனந்த்குமார் பதிலளித்துள்ளார்.

    இப்போ எங்கே இருக்கீங்க

    பிறகு தொட்டி கிணறு பகுதியில் ஆனந்தகுமார் செல்லும்போது சிறுநீர் கழிப்பதற்காக வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 முகமூடி இளைஞர்கள், பைக்கில் வைக்கப்பட்டிருந்த 7 கற்கள் கொண்ட பையை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றுள்ளனர்.. இதைப்பர்த்து அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார், உடனடியாக மேல்பட்டி போலீஸ் ஸ்டேனுக்கு சென்று புகார் அளித்தார்.

    போலீஸார் இதுதொடர்பான விசாரணையை நடத்தியபோது, அந்த பையை தூக்கிக்கொண்டு ஓடியது, கோட்டைச்சேரி பகுதியைச் சேர்ந்த ராகுல் மற்றும் சபரி என்பதும், அவர்கள் புருஷோத்தமனின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புருஷோத்தமனை சுற்றிவளைத்து பிடித்தனர்.. அவரிடமிருந்து 7 கற்களையும் மீட்டனர்.. ஆனால், ராகுல் மற்றும் சபரி தலைமறைவாக உள்ளதால் தேடி கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    பேரணாம்பட்டு போலீஸ்

    ஆனால், போலீசார் கைப்பற்றியுள்ள 7 பட்டை தீட்டப்படாத கற்களின் மதிப்பு ரூ.25,000 மட்டுமே என்று ஆனந்தகுமார் சொல்கிறாராம்.. இது போலீசாருக்கு சந்தேகத்தை தந்துள்ளது.. காரணம், அலெக்ஸாண்ட்ரைட் கற்கள் எப்போதுமே காஸ்ட்லியானவை.. அப்படி இருக்கும்போது, இந்த 7கற்களும் வெறும் 25000 ரூபாய் என்று ஆனந்த்குமார் சொல்வது ஏன்?

    இந்தக் கற்கள் உண்மையான அலெக்ஸாண்ட்ரைட் தானா? அந்த 7 கற்கள் உண்மையில் எத்தனை மதிப்பு கொண்டவை? சான்றிதழ்களில் கூறப்பட்டிருப்பது உண்மையா? என்றெல்லாம் அடுத்தடுத்த விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.. ஒரு சாதாரண வழிப்பறி சம்பவம், வேலூர் மாவட்டத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது...!!

    English Summary

    Vellore Alexandrite Stones.. Where Are You Now? Phone Call Raises Police Doubt in Peranampattu