பேரழிவு ஏற்பட்டால்.. இந்த நாட்டில் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம்! விஞ்ஞானிகள் சொன்ன புதிய தகவல்!

  • வாஷிங்டன்: நேபாள வெள்ளத்தை பார்த்து.. இயற்கை பேரழிவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை மக்கள் புரிந்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் பேரழிவில் சிக்கினால்.. எந்த நாட்டிலிருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

    Advertisement

    'குளோபல் சேலஞ்சஸ்' என்கிற அறிவியல் இதழில் இது குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி 'புளோரியன் உல்சரிச் ஜேன்' தலைமையிலான குழு ஆய்வை நடத்தி, எந்த நாடு பாதுகாப்பானது என்பதை அறிவித்திருக்கிறது.

    Advertisement

    இந்த ஆய்வின்படி.. உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுகிறது எனில்.. அதாவது பெரிய விண்கல் விழுந்து, எரிமலைகள் வெடித்து, வானம் முழுவதும் சூரிய வெளிச்சமே இல்லாத அளவுக்கு புகை மூடுகிறது எனில்.. மற்ற நாடுகளில் இருக்கும் மனிதர்கள் சீக்கிரமாக உயிரிழந்துவிடுவார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் மட்டும் உயிருடன் இருப்பார்கள். அங்கும் பாதிப்பு இருக்கும்.. ஆனாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது.

    ஏனெனில் ஆஸ்திரேலியா தீவு கண்டனம். அது உலகத்தின் ஓரத்தில் இருக்கிறது. தனிமைப்பட்டிருப்பதால்.. உடனடியாக இந்த பாதிப்புகளிலிருந்து அதனால் மீண்டு வர முடியும். உலகமே முடங்கினாலும் தன் நாட்டு மக்களுக்கு தேவையான உணவை தயாரிக்க அபரிமிதமான விவசாய திறன், வலுவான உள்நாட்டு தொழிற்துறை மற்றும் சுரங்க வளங்களை வைத்து அந்நாட்டு மக்களை காப்பாற்றிவிட முடியும். ஆஸ்திரேலியா மிகப்பெரிய பணக்கார நாடாகவும், ஜனநாயக நாடாகவும் இருப்பது இன்னொரு பிளஸ் பாயிண்ட்.

    Advertisement

    பயங்கரமான சைபர் அட்டாக் அல்லது மின்காந்த புயல்களால் உலகம் முழுவதும் உள்ள மின்சார கட்டமைப்பு பாதிக்கப்பட்டாலும் கூட ஆஸ்திரேலியா அசால்ட்டாக மீண்டு வந்துவிடும். கோவிட் 19 போல.. மற்றொரு கொடிய நோய் உலகம் முழுவதும் தாக்குகிறது என்றாலும் கூட ஆஸ்திரேலியாவுக்கு ஒன்னும் ஆகாது. ஏனெனில் அது தனியாக இருப்பதால்.. முன்கூட்டியே தனது நாட்டிற்குள் மக்கள் நுழைவதை தடுத்துவிடும். எனவேதான் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு ஆஸ்திரேலியா என்று சொல்லப்படுகிறது.

    இது தவிர நியூசிலாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் அர்ஜெண்டினாலும் பாதுகாப்பான நாடுகளின் லிஸ்டில் அடுத்தடுத்து இருக்கின்றன.

    English Summary

    Scientists Reveal the Safest Country: Witnessing the floods in Nepal, people have come to realize just how devastating natural disasters can be. Against this backdrop, scientists have explained which countries would offer the best chance of survival should the world be struck by a global catastrophe.