Aippasi Annabhishegam: ஐப்பசி பிறந்தாச்சு! சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் எப்போது? எதை செய்யலாம்?

  • சென்னை: ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் சிவன் கோயில்களில் வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    Advertisement

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியின் போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயலில் பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு. ஆனால் ஐப்பசி மாத பவுர்ணமியில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாதம் கடந்த 18ஆம் தேதி பிறந்தது. அக்டோபர் 25 ஆம் தேதி பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    Advertisement

    அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கத்திற்கு அன்னத்தை சாத்தி அதனுடன் பாகற்காயையும் வைத்து படைப்பது வழக்கம். இந்த நாளில் பக்தர்கள் எக்காரணத்தை கொண்டு அன்னத்தை வீணடிக்கக் கூடாது. இப்படி செய்தால் அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

    சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் அன்னாபிஷேகம்தான் சிறந்தது. சிவபெருமான் தனது தலையில் தாங்கியிருக்கும் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் இந்த ஐப்பசி பவுர்ணமி நாளில் பிரகாசிப்பதாக ஐதீகம். எனவே அன்னாபிஷேக நாளில் சிவபெருமானின் தலையில் குடியிருக்கும் சந்திரனையும் வணங்குவதால் மனக்கவலைகள் நீங்கும்.

    அன்னாபிஷேகத்தின் போது சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தை வைத்து காய்கறிகள், பழங்களை வைத்து அபிஷேகம் நடைபெறும். அது போல் கோயில்களில் பழங்கள், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    Advertisement

    அன்னாபிஷேகத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், அதற்கு தேவையான அரிசி, அபிஷேகத்திற்கு பால், தேன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் சிறப்பு! வீட்டில் உள்ள சிவன் சிலைகளுக்கும் அன்னத்தால் அபிஷேகம் செய்யலாம். பச்சரிசியால் செய்யப்பட்ட சாதத்தை ஆற வைத்து சிவ லிங்கத்தில் வைக்கலாம். அதனுடன் காய்கறி, பழங்களை அலங்கரிக்கலாம்.

    English Summary

    Do you know when is Ippasi Annabhishegam celebrated in this year? What are do's and dont's?