ராகு கேது பெயர்ச்சி 2026: மேஷ ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களான இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. ஐப்பசி 27 ஆம் தேதி, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

rahu-ketu-peyarchi-2026-rahu-ketu-peyarchi-palangal-for-mesham-rasi

கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சி சமயத்தில் கடகத்தில் குருவும், மீனத்தில் சனியும் இருக்கின்றனர். சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.

ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசியினருக்கு 11 ஆம் வீட்டில் இருந்த ராகு 10 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். கேது பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மகரத்தில் ராகுவும், கடகத்தில் கேதுவும் பெயர்ச்சியாகின்றனர். தொழில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.

பெயர் புகழ்

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சியை செய்வது ஏற்றத்தைத் தரும். மலக்குடல், கழிவுப் பாதை, வயிறு போன்ற பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் அதிகரிக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் பெரிய பெயர், புகழுடன் இருப்பீர்கள்.

ஆரோக்கியம்

உறவுகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. மேஷ ராசி பெண்கள் ஹார்மோன் குறைபாடுகள், கர்ப்பப்பை பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். சித்திரை மாதம் முடியும் போது பெரும் வெற்றிகளும், சந்தோஷங்களும், அதிர்ஷ்டமும் ஏற்படும். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் உடற்பயிற்சி மிக அவசியம்.

அனுகூலம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, குடும்பம் என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. புதிய குழந்தைகள் வரவு உண்டாகும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். பிள்ளைகளைப் பற்றிய தவறான எண்ணங்கள் அனைத்தும் மாறும்.

உறவுகளுடன் தகராறுகள் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களின் ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+