முதல்வர் விஜய்க்கு விழா எடுப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.. ஏன் தெரியுமா? ஆர்கே செல்வமணி ஆதங்கம்

  • சென்னை: முதல்வர் விஜய்க்கு திரையுலகினர் சார்பில் பாராட்டு விழா நடத்துவது பற்றிய பேச்சுகள் ஒரு பக்கம் இருக்க, முதல்வருக்கு விழா நடத்துவது பற்றிய பேச்சுக்கள் ஒரு பக்கம் இருக்க முதல்வருக்கு விழா எடுப்பதால் திரைத்துறை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று இயக்குநரும், பெப்சி (FEFSI) தலைவருமான ஆர்கே செல்வமணி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று இருக்கிறது.

    Advertisement

    முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு திரைத்துறையினர் பலரும் அவரை சந்தித்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அதே நேரத்தில் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்தும் தொடர்ந்து பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சினிமாக்காரர்களை மட்டுமே விஜய் அதிகமாக சந்திக்கிறார். மக்களை எல்லாம் சந்திக்கவே மாட்டாரா? என்று விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இதுகுறித்து ஆர்கே செல்வமணி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

    Advertisement

    முதல்வர் விஜய்க்கு விழா

    அதில், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதால் திரைப்பட தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆனால் நாங்கள் அவருக்கு நிகழ்ச்சி நடத்தி ஏதோ ஆதாயம் தேடிக்கொள்வது போல ஏதேதோ சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த உண்மையையும் கிடையாது. முதல்வர் விஜய் திரைப்பட துறையினரை மட்டும் சந்திக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். அவர் ஒரு நாளைக்கு 100 பேரை சந்திக்கிறார். ஆனால் அதில் ஒரு சில சினிமா பிரபலங்களை சந்தித்ததும் அவர்கள் போட்டோக்கள் வெளியிட்டதும் அந்த போட்டோக்கள் மட்டும் தான் இணையத்தில் வைரலாகி விடுகிறது. உடனே அவர் திரை பிரபலங்களை மட்டும்தான் சந்திப்பாரா என்று என்னிடமே சிலர் கேட்கிறார்கள்.

    Advertisement

    முதல்வர் பற்றிய விமர்சனங்கள்

    முதல்வர் மற்றவர்களையும் சந்திக்கிறார். ஆனால் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா? அதுபோல நாங்கள் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். அதனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ரைட்ஸ் வாங்குற தொலைக்காட்சிக்கு வேண்டும் என்றால் பிரயோஜனம் இருக்கும். எங்களுக்காக அரசு எந்த ஒரு சலுகைகளையும் செய்யப்போவதில்லை.

    வரியில் சலுகை

    ஆனால் ஏற்கனவே இதுவரைக்கும் நாங்கள் எங்களுடைய சம்பாத்தியத்தில் 40 பைசா அரசுக்கு வரியாக கொடுத்துக் கொண்டிருந்தோம். அதை இப்போதைய அரசு 30 பைசாவாக மாற்றி இருக்கிறது. அதற்குத்தான் நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். உடனே எல்லோரும் எங்களுக்கு அரசு எந்த சலுகையும் செய்துவிட்டு என்று நினைக்க வேண்டாம். நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தில் தான் வரியில் அவர்கள் மாற்றம் செய்திருக்கிறார்களே தவிர அதைவிட எங்களுக்கு வேறு எந்த சலுகையும் கிடைக்கவில்லை.

    Advertisement

    சினிமா தொழிலாளர்களின் உண்மையான பிரச்சனைகளை முதல்வருடன் எடுத்து சென்று அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுடைய முக்கிய குறிக்கோள். திரைத்துறையை வெளியில் இருந்து பார்க்கும்போது நடிகர்கள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என வெளிச்சத்தில் இருப்பவர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்கள். ஆனால் ஒரு திரைப்படம் உருவாக அவர்களுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வேலை தொடர்ந்து இருக்கிறதா? வருமானம் எப்படி இருக்கிறது? வயதான பிறகு அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? மருத்துவம் மற்றும் குடும்ப வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது? என்பதுதான் முக்கியமான கேள்வி.

    Advertisement

    இயக்குநர் ஆர்கே செல்வமணி விளக்கம்

    இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அரசிடம் பேச வேண்டும் என்று முயற்சி செய்கிறோம் என பேசியிருந்தார். அப்போது இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் திரைத்துறைக்கு தனியான நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    English Summary

    R K Selvamani: Director and President of FEFSI RK Selvamani recently met the media and said that there is no benefit to the workers of the film industry if there is talk of holding a function for CM Vijay on behalf of the film industry. It is gaining attention in cinema and political circles.