டோரதி vs மீசைய முறுக்கு 2.. முதல் 3 நாள் வசூலில் எவ்வளவு பெரிய வித்தியாசமா? யார் முன்னிலையில்?

  • சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் 2 படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஒரே நேரத்தில் பிடித்தன. ஒன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி இன்னொன்று ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கிய இசையமைத்த மீசைய முறுக்கு 2 என 2 படங்கள் வெவ்வேறு காலத்தில் உருவானவை என்பதால் ரிலீசுக்கு முன்பு இந்த 2 படங்களையும் வைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

    Advertisement

    டோரதி படத்தில் ரிஷி காந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்திருக்கிறார். மறுபக்கம் மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கிய நடித்திருப்பதோடு இசையமைத்தும் இருக்கிறார். சுந்தர் சி மற்றும் குஷ்புவின் அவ்னி நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. படங்கள் வெளியாகி 3 நாட்கள் முடிந்து இருக்கும் நிலையில் இப்போது ரசிகர்களின் கவனம் கதையை தாண்டி வசூல் பக்கமும் திரும்பி இருக்கிறது.

    Advertisement

    டோரதி வசூல் நிலவரம்

    டோரதி படம் வெள்ளிக்கிழமை வெளியான முதல் நாளில் இந்திய அளவில் சுமார் 90 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. வது நாளில் வசூல் 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்து 1.51 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன்படி 3 நாட்களில் 3.66 கோடி மொத்த வசூல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீசைய முறுக்கு 2 வசூல் நிலவரம்

    ஆனால் அதே நேரத்தில் பக்கத்து தியேட்டரில் ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 வேறு வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளிலேயே இந்த படம் 3.30 கோடி வசூல் செய்திருக்கிறது. 2வது நாளில் 4.60 கோடி 3வது நாளில் 6. 05 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 3 நாட்களில் 13.95 கோடி ரூபாய் மொத்த வசூல் என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல் நாளில் இருந்து வந்ததைவிட ஒவ்வொரு நாளும் மீசைய முறுக்கு 2 படத்தின் வசூல் அதிகமாகவே அதிகரித்து வருகிறது.

    Advertisement

    டோரதி படத்தை பொருத்தவரை படம் வெளியாவதற்கு முன்பே இது கமர்சியல் படமாக இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான். கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான கதைக்களம், ரிஷிகாந்த், சனந்த் கேரக்டர் கீர்த்தி சுரேஷின் நடிப்பு இளையராஜாவின் இசை என படத்தை பற்றி பலரும் பேசி வந்தனர்.

    ஆனால் படம் வெளியான பிறகு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் படத்தில் வசூல் குறைந்துவிட்டது என்றும் சொல்லிவிட முடியவில்லை. காரணம் முதல் நாளை விட ஒவ்வொரு நாளிலும் வசூல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னதான் நெகடிவ் இருந்தாலும் இந்த படத்திற்கும் படிப்படியாக வசூல் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement
    கார்த்தியின் சர்தார் 2 vs சூரியின் மண்டாடி 2வது நாளில் யார் மாஸ்? வசூலில் எதிர்பாராத மாற்றம்!

    English Summary

    Dorothy vs Meesaya Murukku 2: Last Friday, two films in Tamil cinema simultaneously captured the attention of fans: *Dorothy*, directed by Karthik Subbaraj, and *Meesaya Murukku 2*, which was written, directed, and scored by Hiphop Tamizha Adhi. As these films were developed during different periods, there was significant anticipation surrounding both releases. Details regarding their box-office collections over the first three days have now been revealed.