சென்னை: பெரிய ஹீரோ படம் இல்லாமலேயே நல்ல கதை இருந்தா ரசிகர்கள் கொண்டாடுவாங்க என்பதை சமீபத்தில் நிரூபித்த படங்களில் ஒன்று 'பரிமளா அண்ட் கோ'. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம், இப்போது (Parimala & Co OTT Release) ஓடிடிக்கு வரப்போகிறது என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் படத்தின் பெரிய பலமாக அமைந்தது.
உண்மையில் இந்த படம் மே 28-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் சூர்யாவின் 'கருப்பு' படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் ஓடிக் கொண்டிருந்ததால், போட்டியை தவிர்க்க படத்தின் வெளியீட்டை ஜூன் 5-க்கு மாற்றியது படக்குழு. அந்த முடிவு சரியானதுதான் என்று பின்னர் நிரூபணமாகியது. தியேட்டரில் படம் வெளியான பிறகு, "இது சும்மா ஒரு குடும்ப காமெடி படம் இல்லை" என்று ரசிகர்களே சொல்ல ஆரம்பித்தார்கள். குடும்ப உறவுகள், பரபரப்பான திருப்பங்கள், எதிர்பாராத கொலை மர்மம், அதற்குள் கலந்த நகைச்சுவை என படம் கடைசி வரை சலிப்பில்லாமல் நகர்ந்தது. குறிப்பாக ஜெயராம் - ஊர்வசி கூட்டணி மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மிஷ்கின் நடித்த வித்தியாசமான கதாபாத்திரமும், யோகி பாபு, சாண்டி, சிங்கம்புலி ஆகியோரின் காமெடியும் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது. அதனால்தான் குடும்ப ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல பேச்சைப் பெற்றது. இப்போது இந்தப் படம் வரும் ஜூலை 10-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் ஏதோ ஒரு காரணத்தால் இந்தப் படத்தை பார்க்க முடியாமல் போனவர்கள், "ஓடிடிக்கு எப்போ வரும்?" என்று கடந்த ஒரு மாதமாகவே காத்திருந்தார்கள். அவர்களுக்கான காத்திருப்புக்கு இப்போது முடிவு கிடைத்திருக்கிறது. சமீப காலமாக ஆக்ஷன், வன்முறை, ரத்தம் தெறிக்கும் கதைகள் அதிகமாக வெளியாகி வரும் சூழலில், குடும்பமாக உட்கார்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படங்கள் குறைந்துவிட்டன என்று ரசிகர்கள் சொல்லி வந்தனர். அந்த குறையை ஓரளவுக்கு நிரப்பிய படமாக 'பரிமளா அண்ட் கோ' பார்க்கப்படுகிறது. வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டே, இடையிடையே சஸ்பென்ஸையும் ரசிக்க வேண்டுமென்றால், இந்த ஜூலை 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் 'பரிமளா அண்ட் கோ' பலரின் வீக் எண்ட் வாட்ச் லிஸ்டில் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.ரிலீஸ் தேதி மாற்றம்
Jayaram: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர்.. கிடுக்கிப்பிடி விசாரணை
இந்த வார இறுதியில் OTT-யில் என்ன படம் பார்க்கலாம்? மிஸ் பண்ணக்கூடாத டாப் ரிலீஸ்கள் இதோ!
பரிமளா அண்ட் கோ ஓடிடி ரிலீஸ்
ரசிகர்கள் எதிர்பார்ப்பு