சாப்பாடு போட்டதை சொல்லி காட்டுறீங்களே.. நீங்க மனுசனே இல்ல! பிக் பாஸை கிழித்த பிரசாந்த் ரங்கசாமி

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஆடிஷனில் கலந்து கொண்டு ஸ்டேஜ் வரைக்கும் போய் 2வது போட்டியாளராக மேடையிலேயே வெளியே அனுப்பப்பட்ட பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்ட பதிவு இப்போ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களை விமர்சித்திருப்பது தான் அதற்கு காரணம். ஆனால் அவர் சொன்ன விஷயமும் கரெக்டாக தான் இருக்கு என்று அவருக்கு சப்போர்ட் தான் கூடுகிறது.

    Advertisement

    பிரசாந்த் ரங்கசாமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான காமன்மேன் நிகழ்ச்சியை அதிகமாக விமர்சித்து இருந்தார். அதிலும் போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும், விஜய் டிவி தரப்பை விமர்சித்தும் பேசியிருந்தார். விஜய் டிவிகாரங்க கூப்பிட்டாங்கன்னா உங்களுக்கு அறிவில்லையா? உங்களை இவ்வளவு கேவலமாக ப்ரோமோவில் காட்டுகிறார்கள் இப்படி ஒரு வாய்ப்பு எல்லாம் உங்களுக்கு தேவையா? என்று பேசி இருந்தார்.

    Advertisement

    பிக் பாஸ் பஞ்சாயத்து

    அவருக்காக ரசிகர்கள் ஃபயர் விட்டார்கள். ஆனால் அடுத்த வாரமே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பிக் பாஸ் மேடைக்கு வந்து விட்டார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அப்படி பேசிய மனிதரா? இப்படி மாறிவிட்டார்? இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே அதற்கு விடை கிடைப்பதற்கு முன்பே மேடையில் வைத்து அவரை வெளியே அனுப்பி விட்டார்கள்.

    லட்சுமி பிரியா பேச்சு

    வெளியே வந்ததும் பிரசாந்த் ரங்கசாமி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சில நேரங்களில் தனது குமுறலை கொட்டி வருகிறார். அப்படித்தான் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் முத்தழகுவும் லட்சுமி பிரியாவும் பேசிக் கொண்டிருந்த ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து விமர்சித்திருக்கிறார். அதில் லட்சுமி பிரியா, நான் ஒரு வாரம் முழுக்க சமைச்சு போட்டு இருக்கேன்.. அதை எல்லாரும் தின்னு இருக்காங்க.. அதுக்கப்புறம் என்னை சிம்ப்ளி வேஸ்ட் என்று சொல்லிட்டு இருங்க... என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    இன்னொரு காட்சியில், லக்ஷ்மி பிரியா ஷாதிகாவிடம் இதே பொழப்பலை சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ஷாதிகா, நீங்க சமைக்க மட்டும் தானே செஞ்சீங்க? வேற என்ன பண்றீங்க? என்று கேட்க, அதற்கு லட்சுமி பிரியா, அப்போ எல்லாருக்கும் ஊட்டி விடவா? கக்கா கழுவி விடவா? அதுக்கு தான் நான் இருக்கேன்னா என்று கேட்டு இருக்கிறார்.

    பிரசாந்த் ரங்கசாமி பதிவு

    இந்த வீடியோ கிளிப்பை பகிர்ந்த பிரசாந்த் ரங்கசாமி, "சாப்பாடு சமைப்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதை நீங்க இல்லனா இன்னொருத்தர் செய்வாங்க. சாப்பாடு வழங்குவதை பெருமையாக நினைக்கிறவன் தமிழன்.. ஆனால் சொல்லிக் காட்டுபவன் மனிதனே இல்ல. லட்சுமி பிரியா நீங்க ரொம்ப மோசம்" என்று அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    ஏற்கனவே லட்சுமி பிரியாவுக்கு தான் இப்போ சோசியல் மீடியா முழுக்க நெகட்டிவ் கமெண்ட் வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் வருகிறார் என்றதும் ஆகா ஓகோ எங்க காவிரி வரப்போறாங்க என்று கொண்டாடிய ரசிகர்கள் கூட இவருடைய நிஜ கேரக்டரை பார்த்து கடுப்பாகி புலம்பி வருகிறார்கள். இதற்கு முன்பு லட்சுமி பிரியா மகாநதி சீரியலில் காவிரியாக நடித்ததில் எவ்வளவு துணிச்சலான பொண்ணு என்றெல்லாம் அவரை பாராட்டி இருந்தார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய விளையாட்டு வில்லங்கமாக போய்க் கொண்டிருக்கிறது.

    ரசிகர்கள் கருத்து

    இதற்கிடையே இப்போ பிரசாந்த் ரங்கசாமியும் இந்த பதிவு வெளியிட்டு இருக்கிறார். ஒருவேளை வைல்ட் கார்டு என்ட்ரியாக பிரசாந்த் உள்ளே போனால் இதைப் பற்றி லட்சுமி பிரியாவிடம் பேசுவாரா? என்ற கேள்வி ஒரு சிலருக்கு இருக்கிறது. இன்னும் ஒரு சிலருக்கு பிரசாந்த் மானஸ்தன் இனி உள்ளே போகவே மாட்டார் என்று இப்போதே அவருக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

    English Summary

    Prashanth Rangasamy: A post by Prashanth Rangasamy—who participated in the *Bigg Boss Tamil* Season 10 auditions, made it to the stage, but was eliminated right there as the second contestant—is currently gaining attention online. The reason is his criticism of the *Bigg Boss* contestants; however, he is garnering support because people feel his observations are spot-on.