வருத்தத்தில் பாடகி ஜோனிடா காந்தி பதிவு! வாசலில் விட்டு போனது யார்? பின்னணியில் அந்த நபரா?

  • சென்னை: தமிழ் சினிமாவில் பாடல்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பாடகி ஜோனிடா காந்தி. இவருடைய குரலில் வெளியாகும் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்படி இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஜோனிடா, இப்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறார்.

    Advertisement

    அவர் பகிர்ந்த ஒரு சோகமான பாடல் வரிகளைப் பார்த்துவிட்டு, ஜோனிடாவுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'டியூட்' படத்தில் இடம்பெற்ற கண்ணுக்குள்ள பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. சாய் அப்யங்கர் இசையமைத்த இந்தப் பாடலில் வரும் 'விட்டு போன வாசலிலே' என்ற வரிகளைத்தான் ஜோனிடா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்.

    Advertisement

    அந்த வரிகளில் இருக்கும் சோகமான உணர்வுதான் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வழக்கமாக ஒரு பாடல் பிடித்திருந்தாலோ, அதில் வரும் வரிகள் மனதுக்கு பிடித்திருந்தாலோ பலரும் அதை ஸ்டோரியில் பகிர்வார்கள். ஆனால், ஜோனிடா தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அதிகம் வெளியில் பகிர்ந்துகொள்ளாதவர் என்பதால், அவருடைய இந்த பதிவு ரசிகர்களிடையே வேறு விதமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

    யாராவது உங்களை விட்டு பிரிந்துவிட்டார்களா?, உங்களைக் கஷ்டப்படுத்தியவர் யார்? என்பது போன்ற கேள்விகளுடன் சிலர் அவருக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், ஜோனிடா போன்ற ஒருவரை பிரிந்துவிட்டால் அது அவரை இழந்தவரின் தவறுதான் என்று தங்களுடைய ஆதரவை காட்டுகிறார்கள். அதே நேரத்தில் சமீபத்தில் அனிருத் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்த சோகத்தால் தான் இவர் இப்படி பதிவு வெளியிடுகிறாரா? என்று கூட சிலர் இதற்கு முடிச்சு போட்டு வருகிறார்கள். ஏற்கனவே சினிமாவில் யார் விவாகரத்து செய்தாலும் அதற்கு தனுஷ் தான் காரணமா? என்று சிலர் கலாய்த்துக் கொண்டு இருப்பது போல இப்போ எந்த பாடகி சோகமா இருந்தாலும் அதற்கு அனிருத் தான் காரணமா என்றும் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

    Advertisement

    ஆனால், சமூக வலைதளங்களில் ஒரு பிரபலத்தின் சிறிய பதிவு கூட எப்படிப் பல ஊகங்களுக்கு வழிவகுக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். குறிப்பாக, தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக பேசாத பிரபலங்கள் ஏதாவது எமோஷனலாக பதிவு போட்டால், அதன் பின்னால் என்ன நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கமாகிவிட்டது.

    ஜோனிடாவுக்கும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய பாடல்களை ரசிப்பதுடன், அவரைப் பற்றிய விஷயங்களையும் ரசிகர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். அதனால்தான் இந்த ஒரு ஸ்டோரியே இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    ஜோனிடாவின் இசைப் பயணம்!

    ஜோனிடா காந்தி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஓ காதல் கண்மணி படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் மூலமாகத்தான். அந்த பாடல் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அனிருத், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார்.

    அவருடைய குரலில் வெளியாகும் பாடல்கள் மட்டுமல்லாமல், மேடைகளில் அவர் பாடும் விதமும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதனால் ஒரு பாடகியாக மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் கவனிக்கப்படும் பிரபலமாக ஜோனிடா இருக்கிறார்.

    English Summary

    Jonita Gandhi: Singer Jonita Gandhi has carved a special place for herself in the hearts of Tamil cinema fans through her songs. Her tracks have a dedicated fan base of their own. Having delighted listeners with her music, Jonita has now become a topic of discussion on social media, thanks to her Instagram story.