சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா படம் வரும் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்காக பிரமோஷனில் ஜேசன் கலந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவர் சார்பாக விஜய் கலந்து கொள்ளவில்லை. மகன் படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட எந்த இடத்திலும் பேசவே இல்லையே என்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து ஜேசன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே விஜய் முதல்வரான சமயத்திலும் அவருடைய மகன், மகள், மனைவி யாரும் வரவில்லை என்ற விமர்சனம் இருந்தது. விஜய் பதவி ஏற்கும் போதிலாவது மனைவி கொடுத்த விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருந்தது, அதனால் வரவில்லை என்று கூறப்பட்டாலும் விஜய் சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்படும் போது கூட குடும்பத்தின் சார்பாக யாரும் வரவில்லையே என்ற கேள்விகளும் இருந்தது. ஆனால் அது குறித்து இப்போது ஜேசன் விளக்கம் கொடுக்கவில்லை. தன்னுடைய படத்திற்கு அப்பா வரமாட்டார் என்பதை மட்டும் அவர் கூறியிருக்கிறார்.
அதாவது சமீபத்தில் செய்தியாளர்களிடம் ஜேசன் பேசிக்கொண்டிருக்கும்போது, உங்க அப்பா இப்போ சிஎம் ஆகி இருக்கிறார். அவர் உங்க படத்தை பிரமோட் செய்ய ஒரு நாளாவது வருவாரா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஜேசன், அப்பா முதல்வர் ஆன பிறகு எங்களுக்கு பொறுப்பு அதிகமாக இருக்கிறது. என்னுடைய படத்தின் ரிலீஸுக்காக ரொம்பவே ஆர்வமாக அப்பா காத்திருக்கிறார். படத்தில் என்னதான் பண்ணி இருக்கிறாய் என்று பார்க்கப் போறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் ப்ரொமோஷனுக்கெல்லாம் அவர் வேற தேவையில்லை. வரவும் மாட்டார். அவருக்கு இருக்கும் வேலை ரொம்ப பெரியது. நான் என்ன பண்ணி வைத்திருக்கிறேன் என்பதை பார்த்தால் மட்டும் அவர் போதும். நான் என்னுடைய திறமையால் தான் மக்களிடம் கனெக்ட் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூலாக பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல அவரிடம் உங்க அப்பா உங்களுடைய முதல் படத்திற்கு என்ன பரிசு கொடுத்தார்? என்று கேட்க, அதற்கு சிரித்தபடியே அவருடைய ரசிகர்களை கொடுத்திருக்கிறார் என்று பதில் கொடுத்திருக்கிறார். இந்த பேட்டி வெளியான பிறகு விஜய்யின் மகன் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறார்? ஏற்கனவே முதல் பேட்டியில் பல விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கிற மாதிரி அப்பாவை பற்றி அவ்வளவு பெருமையாக பேசிவிட்டார். இப்போதும் விஜய் பற்றி எவ்வளவோ சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது, சமீபத்தில் கூட லண்டனில் அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கும்போது அங்கு சென்று இருந்தார். அப்போது திரிஷாவும் அஜித் கார் ரேஸ் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்தார். அந்த வீடியோக்கள் வைரலானது. ஆனால் தன்னுடைய அப்பாவை பற்றி எந்த இடத்திலும் விஜய் மகன் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாரே என்று அவருக்கு சப்போர்ட் கூடிக் கொண்டே போகிறது. சந்திப் கிஷன், பிரியா அப்துல்லா நடித்துள்ள சிக்மா படத்துக்கு தமன் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே வெளியான பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நாளை செப்டம்பர் 18ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவும், ட்ரைலர் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. லைக்கா தயாரிக்கும் இந்த படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. சிக்மா படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது. அதுபோல ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த ஏழு கடல் ஏழுமலை படமும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே விஜய், திரிஷா நடித்த திருப்பாச்சி படமும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக முதலில் கூறப்பட்டது. பிறகு இப்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.வதந்திகளுக்கு விளக்கம்
ஜேசன் சஞ்சய் பேட்டி
விஜய் மகனுடன் போட்டி