20ல் துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா வரும் 20ம் தேதி முஸ்ரிப் பூங்காவில் நடைபெறுகின்றது.
துபாய் தமிழ்த்துளி அமைப்பின் சார்பில் பொங்கல் விழா வரும் 20ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை முஸ்ரிப் பூங்காவில் நடைபெறுகின்றது. அப்போது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடக்கவிருக்கிறது. குழந்தைகளுக்கு திருக்குறள் போட்டியும், பெரியவர்களுக்கு சில மகிழ்ச்சியான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. திருக்குறள் போட்டிக்கு அன்புடைமை மற்றும் கல்வி ஆகிய அதிகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். விழா முடிந்தவுடன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
துபாயில் இருந்து முஸ்ரிப் பூங்காவிற்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும். போக்குவரத்து வசதி தேவைப்படுபவர்கள் முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்து கொள்ளவும். விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் வழங்கப்படும். விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்துளி அமைப்பு கேட்டுக் கொள்கிறது. இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050-7472432,050-2593616 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications