• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரதி பக்கம்

By Staff
|

ஞிணிடூணிணூ="ஆடூதஞு" ச்டூடிஞ்ண="ணூடிஞ்டணா">- கி.ராஜநாராயணன்

கி. ராஜநாராயணன். இவர் ஒரு எழுத்துலக பாரதிராஜா. கிராமங்களை தன் எழுத்தின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுபவர். கிராமத்துக் கதைகளை கிராமத்துத் தமிழிலேயே வழங்குவதில் இவருக்கு நிகர் இவர் யாருமில்லை.

இவர் நமக்கு வாரம் ஒரு "கத சொல்வாரு"....

இந்த வாரம்...

ஒரு ஊர்ல ஒரு புருசன், பொண்டாட்டி இருந்தாக. கலியாணம் முடிஞ்சி ஆறு ஏழுமாதந்தான் இருக்கும்.

இந்த புருசக்காரன் பெரிய்ய தரவலி ( சரியான லொள்ளு பிடிச்சவன். எதற்கும்கட்டுப்படாத தன் போக்கு உள்ளவன் பிரச்சனைக்காரன் மோசமான பயல்) கல்லைக்கண்டா எடுப்பான் கட்டியைக் கண்டா உடைப்பான்.

பெண்டாட்டிக் காரி ஒரு அப்புராணி. அவளப் பெத்தவங்க இந்தத் தரவலிக்காரனோடகுணம் தெரியாம இவள கட்டிக் கொடுத்துட்டாக.பொண்ணு வீட்டுல மூணுமாசம்மாப்பிள்ளைச் சோறு தின்னு, ஒரு வீட்டுக்குள்ள ஒளிவு சுளிவா இருந்து ஆயிருச்சி.அதுக்குப் பிறகு மறுவீடு வச்சி இவன் ஊருக்கு பெண்டாட்டிய கூட்டீட்டு வந்தாம்.

வந்தா, வந்த பிறகுதாம் தெரிஞ்சது இவனுக்கு சுத்துப்பட்ட ஊரெல்லாம் வப்பாட்டிகதொடுப்பு உண்டும்ன்னுட்டு

.அப்படியான ஒரு ஊர்ல போயி இவம் ராத்தங்கிட்டு வருவாம். அந்த ராத்திரிக்கு மேலஎந் நேரத்துக்கு வருவாம் ன்னு தெரியாது. வீட்டுப்படியில கால் வச்சதும், பெண்டாட்டிதயாரா செம்புல தண்ணிய வச்சிக்கிட்டு நிக்கனும். தவறினா இடை வாரைகழத்திக்கிட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிருவாம்.

ஒரு நா மத்தியானம். வீட்டுல வேற யாருமில்ல. வீட்டுக்கு முன்னால இருக்க உரல்ல,குத்துவாலித்தவசம் (தானியம்) குத்திக்கிட்டு இருந்தா இவ.

அப்ப, ஒருத்தன் மாம்பழம் வித்துக்கிட்டு வந்தாம். இவளுக்கு மாம்பழம்ன்னாரொம்பப் பிரியம். ஒரு ஆழாக்கு தவசத்துக்கு ஒரு மாம்பழம் வாங்குவமா ன்னுநெனைச்சா.பிறந்த வீடா இருந்தா அப்படிச் செய்யலாம். இது புருசன் வீடு.

மாம்பழத்துக்காரன் இவ வீட்டுக்கு முன்னால கூடைய இறக்கிவச்சிட்டு இவ குனிஞ்சிநிமுந்து குத்துரதையே பாத்துக்கிட்டிருந்தாம். ரவிக்கை போடாம இவ குத்துரத பாக்கபாக்க அவனுக்கு இன்னும் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.

சுத்தும் முத்தும் பாத்தாம். தெருவே வெறிசசோடிக் கிடக்கு: ஒரு மக்க மனுசரக் காணம்.

வீட்டுக்குள்ள ரெண்டு எட்டு எடுத்து வச்சி, தாயீ குடிக்க இம்புட்டு தண்ணி கொடேம்.வெயில்ல அலைஞ்சது தாகம் நாக்கெ சுருட்டுது ன்னாம்.

உலக்கைய சாத்தி வச்சிட்டு உள் லீட்டுக்குள்ள தண்ணி கொண்டு வரப்போனா. இவன்கையில ஒரு மாம்பழத்த எடுத்துக்கிட்டு விடுவிடுன்னு உள்ளெ நுழைஞ்சிட்டாம்!

அப்பதாம் அவளுக்கு மாம்பழத்துக்காரனோட நோக்கம் புரிஞ்சது. மோசக்கேடுஆயிரும் போலிக்கே பயந்துட்டா. பயம் அவளக் கட்டிப் போட்டுட்டது.

அவ மறுதளிக்க, அவம் வற்புறுத்த ... இந்த நேரம் புருசன் வீட்டுக்குள்ள வந்துட்டாம்.

வீட்டுக்கு வெளியே மாம்பழக் கூடையை பாத்ததுமே இடைவாரை கழட்டிக்கிட்டுதாம்வீட்டுக்குள்ள வந்தாம்.

வந்ததும் அங்கெ பாத்த காட்சி அவன மிருகமாக்கிட்டது.

என்ன ஏதுன்னு கேக்காமயே மாம்பழத்துக்காரன விளாச ஆரம்பிச்சிட்டாம்.இவனோட உரத்துக்கு முன்னால மாம்பழத்துக்காரனோட உடம்பு தாக்குப்பிடிக்கமுடியல. உயிர்ப்பயம் வந்து கூப்பாடு போட ஆரம்பிச்சிட்டாம். ஊரே கூடீட்டது.யாரலயும் விலக்குப் பிடிக்க முடியல.

இவனக் கொல்லாம விடப்படாதுன்னு அவன தூக்கிப் போட்டுதுவைக்காம்..பந்தாடுதாம், உயிர்த்தலத்துலயே மிதிக்காம்.

ஊர்ப் பெரியவங்க வந்து,அடப் பாவிப்பயலே விட்டுத் தொலடா. மாம்பழம் விக்கவந்தவம் நம்ம ஊர்ல மண்டையப் போட்டுட்டா அது உன்னோட போகாமஊரையெல்லாம் சேத்துப் பிடிக்கும்டா ன்னு சொல்லவும், அவன ஊருக்கு வெளியகொண்டு போயி போட்டுட்டு வந்து, கூடியிருந்தவங்கள எல்லாம் போங்கஎல்லாரும்ன்னு விரட்டி விட்டுட்டு, குடிமகன வரச் சொன்னாம்.

பொண்டாட்டி தலைய மழூங்க சிரைக்கச் சொன்னாம். வாசலுக்கு முன்னால ஒரு முளைஅறைஞ்சி அதுல அவள நாய கட்டிப் போட்டது போல கட்டிப் போட்டுட்டாம்.

ஊர்ப்பெரியவுக வந்து எவ்வளவோ சொல்லிப் பாத்தாக. இதெல்லாம் எங்க குடும்பசமாச்சாரம்: புருசன் பொண்டாட்டி பாடு. போங்க ஒங்க சோலியப் பாத்துன்னுசொல்லீட்டாம்.

அப்பிடிச் சொன்னதோட நிக்காம உடனே போயி பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணுக்குத்தாலியக் கட்டி கூட்டீட்டு வந்துட்டாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more