முகத்தில் தெளித்த சாரல்...
ஹைகூ என்பதற்குக் கிளிஞ்சல் என்று பொருள்.
ஒவ்வொரு கிளிஞ்சலிலும் கடலும் ஒளிந்திருக்கிறது-
கடல் பற்றிய எண்ணங்கள்-
கடலின் அனுபவங்கள்
கிளிஞ்சலின் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
கிளிஞ்சல் - கடல் தள்ளிய அபரிமிதங்கள் - உபரிகள்.
கிளிஞ்சல் என்று அல்ல -
பனித்துளி கூட போதும்.
பிரபஞ்சத்தின் பிரதிநிதியாயிருக்க.
ஒரு கிளிஞ்சலை காதுக்குள் வைத்தால் கடலின் ஓசை தெரிவது போல
ஒரு ஹைகூவில் வாழ்வின் ஆழத்தை அறிந்துகொள்ளலாம்.
ஒரு குவளை நீர் போதும் - நதியின் சுவையை உணரலாம் -
ஒரு நதியையும் சுவைத்தபின் தான் முடிவெடுப்பது என்றால்
எப்படி முடியும்?
வசந்தம் கழிகிறது
பறவைகள் கத்துகின்றன - கண்ணீர்
மீன்களின் விழிகளில்
-பாஷோ
Spring passes
and the birds cry out tears
in the eyes of fishes
-Basho
என்கிற ஆங்கில வரிகளின் தமிழ் வார்ப்பு.
வசந்தம் போகிற போதெல்லாம்
வருத்தம் பறவைகளுக்கு வருகிறது - என
பாஷோ சொல்கிறார்.
நாமும் அப்படித்தான் நினைக்கிறோம் -
வறட்சி வரும்போது மிருகங்கள் வருந்தும் -
இலையுதிர் வரும்போது பறவைகள் அழும் -
என்றெல்லாம் நம் எண்ணத்தை அவற்றின் மூளையில் திணிக்க முற்படுகிறோம்.
வசந்தம் போவதற்கு அவை ஒருபோதும் வருந்துவதில்லை -
அவை இயற்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றன.
வசந்தம் இருக்கும் இன்னொரு இடத்தை
அவற்றால் எளிதில் தேடிக் கொள்ள முடியும்.
இடம்விட்டு இடம் பெயர அவற்றால் முடியும்.
காற்றைக் கிழித்துக் கொண்டு -
பூமியின் சுழற்சியைப் புரிந்து கொண்டு -
பூமத்திய ரேகையில் தங்கள் முகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியை
அவற்றால் தேடிக் கொள்ள முடியும் -
பறந்து சாவது பயத்தால் சாவதிலும் உன்னதமென
பறவைகள் கருதுகின்றன.
மீன்களும் அழுவதில்லை -
ஒருவேளை அழுதால் அதை எப்படிக் கண்டுகொள்வது -
தண்ணீரிலிருந்து அவற்றின் கண்ணீரை மாத்திரம் எப்படி தரம் பிரிப்பது?
கவிஞனால் முடியும் -
அவன் கண்களுக்குள் பாலில் இருக்கும் வெண்ணெயும்,
விறகில் இருக்கும் நெருப்பும் தென்படுகின்றன.
பாஷோ நண்பர்களை விட்டுப் பிரிவதை
உருவகப்படுத்திப் பேசகிறார்.
நண்பர்கள் - வசந்தகாலமாய் இருக்கிறார்கள்
அவர்களைப் பிரிவது - அனைத்தையும் துயர நிலையில்
காட்சிப்படுத்துகிறது - பறவைகளையும், மீன்களையும்-
பறவைகள் போய்விட்டனவே என்று
மீன்கள் மகிழத் தானே வேண்டும் -
ஏனென்றால் பறவைகள் பறக்கும் போதெல்லாம்
மீன்களின் இதயத்துடிப்பு இரட்டிப்பாகுமே!
நீரின் மீது பறக்கும் போது
புறாக்களையும், கழுகுகளையும் அவை எப்படி
வேறுபடுத்திப் பார்க்க முடியும்?
ஆனாலும் பறவைகள் போகிறபோது மீன்கள் வருத்தப்படும் -
பறவைகள் இருக்கும் வரைதான்
மீன்களின் வாழ்க்கையில் சுவாரசியம் என்பதால்.
ஆபத்துகளுடன் வாழ்வதைத் தான்
ஒவ்வொரு உயிரினமும் நேசிக்கின்றது -
மனிதனைத் தவிர
கருங்கல்லால் கல்லறை கட்டப்படுவது கூட தப்பித்தவறி
எழுந்து வந்து விடக்கூடாது என்பதற்காகத்தானே!
மரணத்திலும் பாதுகாப்பு இல்லை
எனினும் மரணத்தையும் அலங்கரித்து காபந்து செய்கிறோம்
மரணம் ஒரே ஒரு நொடியில் நிகழ்வது-
அதற்காக மற்ற நொடிகளை ஏன் நொடிக்கச் செய்ய வேண்டும்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications