முகத்தில் தெளித்த சாரல்...
யுகோஸ்லோவியாவின் ஹைகூ ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
சுவர்க் கோழிகள்
கோடைப் பகல் அமைதியை
இன்னும் அதிகமாக்குகின்றன.
The noisy crickets
make even deeper
The summer day silence
vio vukasovic
உற்றுப்பார்த்தால் உண்மை தெரியும்-
கடினமான பாறையைச் தோண்டினால் தோன்றும் ஊற்று
வற்றுவதேயில்லை-
சண்டைக்குப்பின் ஏற்படுகிற இணக்கம் ஆழமானதாயிருக்கிறது-
முரண்பாடுகளுக்கிடையே உண்மை இறைந்து கிடக்கிறது.
டாவோ சொல்கிறது
மென்மையானதே உறுதியானது
வளைந்து கொடுப்பதை உடைக்க முடியாது என்று
புன்னகை புரிந்துகொண்டு நமக்காக காத்திருப்பவனை
எப்படி புண்படுத்த முடியும்.
இருளையும், பகலையும் எப்படி இனம் பிரிப்பது?
எல்லா பகலிலும் இருளும் ஒட்டிக்கொண்டிருக்கிறது-
இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு
இருளின் அடர்த்தியின் விகிதத்தில் தானே தவிர
இருள் இல்லாமையால் அல்ல-
நாம் பகலிலும் விழிகளை மூடினால்
வீட்டின் சன்னல்களை மூடினால்
வரும் இருட்டை எப்படி விரட்டுவது?
இருட்டே நிரந்தரம் - வெளிச்சம் தற்காலிகம் -
ஆதியும் அந்தமும் இருட்டுதான்
கருவறையும் இருட்டு-
கல்லறையும் இருட்டு-
வெளிச்சம் என்பது இடைப்பட்ட காலம்தான்.
கோடைப் பகல் அமைதியானது -
யாரும் வீதியில் இல்லை. விளையாட்டு இல்லை-
ஆமைகள் ஓட்டுக்குள் அடங்குவது போல்
மனிதர்கள் வீட்டுக்குள் அடங்குவர்.
அமைதியென்பது நிசப்தமல்ல-
அமைதியென்பது நிசப்தத்திலும் மாறுபட்டது-
அமைதி இயல்பாய் உருவாவது-
பூக்களின் சிரிப்புக்கும்,
சருகுகளின் சலசலப்புக்கும்
வணணத்துப் பூச்சிகளின் சிறகசைப்புக்கும்
வண்டுகளின் ரீங்காரத்திற்கும்
பறவைகளின் பாட்டிற்கும்
அமைதியின் மடியில் இடம் உண்டு.
அமைதி தோட்டத்தில் நிலவுவது-
நிசப்தம் மயானத்தில் காண்பது.
நிசப்தம் எதிர்மறையானது-
செயற்கையானது
நாமே உண்டு பண்ணுவது-
அமைதியைப் பறவைகளின் பாடல் வரிகள்
அலங்கரிக்கின்றன.
சிகாடா பூச்சிகளும்,
சுவர்க் கோழிகளும் அவற்றின் அடர்த்தியை அதிகப்படுத்துகின்றன-
கருப்பு மீசைக்கடியில் இருக்கும் பற்களின் வெண்மை
இன்னும் அதிகமாய்த் தெரிவது போலத்தான்
சுவர்க்கோழிகளின் சப்தம் அமைதியை அதிகப்படுத்துகின்றது.
சுவர்கோழிகளின் சப்தம் நமக்கு
ஆறுதலைத் தருகிறது.
நிசப்தத்தில் நாம் தொலைந்து போகிறோம்-
அமைதியில் நம்மைக் கண்டு பிடிக்கிறோம்-
வாழ்க்கை என்பது தொலைபபதிலும், தேடுவதிலுமாய்த் தொடர்கையில்
எப்போது கண்டுபிடிப்பது நிகழும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications