For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

பார்த்த னெழுந்துரை செய்வான் ; - இந்தப்

பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.

தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு - எங்கள்

சீரிய நண்பன் கண்ணன் கழலானை ;

கார்த்தடங் கண்ணி எந்தேவி - அவள்

கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை ;

போர்த் தொழில் விந்தைகள் காண்பாய் -ஹே!

பூதலமே! அந்தப் போதினில்! என்றான். (102)

35. பாஞ்சாலி சபதம்

தேவி திரவுபதி சொல்வாள் -ஓம்

தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன் ;

பாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப்

பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,

மேவி இரண்டுங் கலந்து - குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது

செய்யும்முன்னே முடியே னென்றுரைத்தாள் . (103)

ஓமென் றுரைத்தனர் தேவர் - ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.

பூமியதிர்ச்சி உண்டாச்சு - விண்ணைப்

பூமிப் படுத்திய தாஞ்சுழற் காற்று,

சாமி தருமன் புவிக்கே - என்று

சாட்சி யுரைத்தன பூதங்க ளைத்தும்!

நாமுங் கதையை முடித்தோம் - இந்த

நாளில் முற்றும் நல்லின் பத்தில் வாழ்க. (104)

பாஞ்சாலி சபதம் முற்றிற்று

(அடுத்து ஞானப்பாடல்கள்)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X