கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு ஊர்ல ஒரு அண்ணனும் தங்கச்சியும் இருந்தாங்க. அவங்களுக்குள்ள பொண்ணக் குடுத்து பொண்ண வாங்க்கிக்கிடுற குண்டாமாத்துச் சம்பந்தம்செஞ்சிக்கிட்டாங்க.
அண்ணனுக்கு ஒரே ஒரு ஆம்பிளப்பிள்ளை. திரும்பிப் பாக்கும்படியான அழகு. நல்ல படிப்பு. குணம். அவனுக்கு அரண்மனையிலேயே வேலை கிடைச்சிட்டது.
தங்கச்சிக்கு ஆறு பொண்ணுங்க.
அடுத்தவாட்டியாவது ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிற்கும்ங்கிற நம்பிக்கையில பெத்துக்கிட்டே வந்ததுல இப்பிடிஆறும் பொண்ணாகவே பிறந்துட்டது.
தங்கச்சி அண்ணங் கால்லவந்து விழுந்தா ; நா எப்பிடி இந்த ஆறையும் கரை சேக்கர்போறேம்ன்னுட்டு.
கவலைப் படாதெ. இந்த ஆறு பொண்ணுகள்ளெ ஒரு பொண்ணுக்கு நாம் பொறுப்பு. ஒம் பொண்ணுகள்ள எந்தப் பொண்ண எம் பையனுக்குப் பிடிச்சிருக்கொஅவளக் கட்டிக்கிடுவாம். கவலைப் படாம பொ,ன்னு அனுப்பி வச்சாம்.
இப்பொ, இந்த ஆறு பொண்ணுகளுக்குள்ளயும் போட்டி ; நாந்தாம் கட்டிக்கிடுவேம் அத்தான இல்ல ; நாந்தாம் கட்டிக்கிடுவேம் அத்தானன்னு.
இவங்க ஆத்தா சொன்னா , ஒங்க பேர்ல அவனுக்கு யார்மேல இஷ்டமோ அவளத்தாம் கட்டிக்கிடுவாம்.
இங்க இவங்களுக்குள்ள ஒரே எசலிப்பும், போட்டியுமா இருக்கு. அங்க அவன் அந்த ஊர்க் கோயில் பூசாரிமக பேர்ல ஆசைப்பட்டுட்டாம்! தினோம் இவன்கோயிலுக்குப் போவாம். பூசாரி மக பூமாலை கட்டிக்கிட்டும் பூசைச் சாமான்கள விளக்கிட்டும் இருப்ப. இவங்கூட அவ சாடைமாடையாபேச்சிக்கொடுத்து, ஒருத்தருகொருத்தர், பேசிப் பேசி பிரியம் வந்து போச்சி.
ஒரு நா இவன் கோயிலுக்குப் போக முறுக்கா தலை சீவிக்கிட்டும் அலங்காரம் பண்ணிக்கிட்டும் இருக்கிறப்ப அப்ங்காரம் வந்தாம். மகங்கிட்ட,
ஏய்யா, ஒனக்கு கலியாணம் முடிக்க நாங்க பேசி முடிச்சிருக்கொம், அத்தெ பொண்ணுக ஆறு பேரு இருக்காக. அதுல ஒனக்கு எந்தப் பொண்ண பிடிச்சிருக்கொ,சொல்லு முடிச்சிருவோம் ங்கவும் இவனுக்கு வயித்தில புளி போட்டுக் கரைக்கி.
அப்பன்கிட்ட அய்யா அத்தைமக ஆறு பேர்ல ஒருத்திக்கு தாலிகட்டனா மீதி அஞ்சி பேரும் எனக்கென்ன குறைச்ச என்னைக் கட்டாமப் போனாம்ன்னுவயிறெறிஞ்சி அழுவாங்க.அவங்க அப்பிடி குமுறிக் கண்ணீர் விட்டாங்கன்னா எங் குடும்பம் விளங்காதுன்னு சொன்னாம்.
அப்பன் அதுக்கு அத்தை மகள்ள ஒருத்தியக் கட்டாமப் போனா என்ன நீ உயிரோட பாக்க முடியாது ங்கவும் இவம் பதறிப் போனாம். பிறகு,
நா யோசிச்சுத் சொல்லுதேம் ன்னு கேட்டுக்கிட்டு, பூசாரி மகளப் பாக்கப் போனாம்.
நீயும் நானும் பிரியமாகப் பழகுதோம், நம்ம பிரியத்துக்கு மோசம் வந்துடும் போலுக்கே. எங்க அய்யா எங்க அத்தெ மகள்ள ஆறு பேர்லஒருத்தியத்தாம் கட்டணும்ன்னு சொல்லீட்டாரு. நாம என்ன செய்யன்னு கேட்டு வருத்தப்பாட்டாம்.
உம்மை நா நெனைச்சி உருக்குலைஞ்சி கிடக்கெம். நோம்பிருந்து நா நொந்து பேயிக் கிடெக்கெம். ஆசை வெச்சி நா அலந்து போயிக் கிடக்கெம். பூசை நாபொங்கி போயி கிடக்கெம். வேற எவளுக்காவது மாலையிட்டா எம் உடம்புல என் உசுரு தங்காதுன்னு சொல்லி கண்ணீரு விட்டா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications