கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு ஆசைக்குச் சொன்ன வாக்கு அப்பிடியே பலிச்சிட்டது. மத்த ரெண்டு ராணிகளுக்கும் நெசப் பிள்ளை பிறந்தது.இவளுக்கு மட்டும் எலி பிறந்தது.
அய்யோ எலியாம் பிள்ள பிறந்துட்டதேன்னு அரமணையே கவலைப்பட்டுது. பிறந்தா என்ன: எலி ராசாதாம் பட்டத்துக்கு வரப்போறார்ன்னு இளையராணி சொல்லிக்கிட்டிருந்தா.
எலி வளந்ததது.. ஓடி ஆடி திரிஞ்சது. அதை யாரும் ஒண்ணும் செய்யப்படாது, சொல்லப்படாதுன்னு ராசா உத்தரவு.
வர வர எலியாம் பிள்ளையோட சேட்டை சகிக்க முடியல. அரண்மனை மொத்தமும் ஓடியாடும். அரிசி பருப்புன்னு எங்ஙயன மூட்டைகஇருக்குமொஅவ்வளத்தையும் கடிச்சிக் குதறி சீரழிக்கும்.
எண்ணெய் ஜாடிகள்ள வாலைவிட்டு ஆழம் பாக்கும். சிறுநீர் கழிக்கிறது, புழுக்கை போடுறது இதெல்லாம் செஞ்சி வச்சிரும்.
பின்னால ஏறி தலையில வந்து குதிக்கும். நல்ல தூக்கத்துல கால் பெருவிரலை வந்து கடிக்கிறது, மெத்தைகளை ஓட்டை போடுறது, தலையணைகளகறும்புறது இப்படி ஏகப்பட்ட ரகளை பண்ணுது.
ராசா உத்தரவுக்கு பயந்து யாரும் ஒண்ணுஞ் சொல்றதில்ல.
ஒரு நா, வெளியிலயிருந்து ரெண்டு பெட்டை எலிகள துணை சேத்துக்கிட்டு வந்துட்டது. இப்படியா அதுக்குக் கூட்டு சேக்காளி தொடுப்புன்னு பெருகி அரண்மனைபூராவும் ஒரே எலிக் கூட்டமாயிட்டது.
இந்த லெச்சணத்துல ராசா கிட்ட இளைய ராணி எப்ப ஏம் பிள்ளைக்கு பட்டங்கட்டப் போறீக: சத்தியம் செஞ்சு கொடுத்தீகளேன்னு நச்சிப் புடுங்குதா.
வாக்குத் தவறாத ராசாவுக்கு என்ன செய்யன்னு புரியல. சபையக் கூட்டி ஆலோசனை பண்ணினார். எலிக்கு பட்டங் கட்டக்கூடாதுன்னு சொல்லீட்டாங்க.இதைக் கேட்டதும் இளையராணி கோவிச்சிக்கிட்டு தாய்வீட்டுக்குப் பொயிட்டா.
ராசாவுக்கு கிறுக்கிப் பிடிச்சது போல ஆயிட்டது. ராத்திரியோட ராத்திரியா, யாரிட்டயும் சொல்லாம காட்டப்பாத்து ஓடீட்டாரு.
நாட்டுக்குள்ள எலிக தொந்தரவு பொறுக்க முடியல. செய்யில்ல விளையிற தவச தானியங்கள ஒண்ணுவிடாம எலிக கறும்பித் தின்னு தொலைச்சிறது. வீட்டுக்கதவுகளை கறும்பி ஓட்டைக போட்டுறுது. பிறந்த பிள்ளக தொப்புள் கொடிய கடிச்சித்தின்னு போடுது.
இனி ராசா சொல்லை மீறாம இருக்க முடியாதுங்கிற நிலை வந்துட்டது. மக்க(ள்) கம்புகள எடுக்க ஆரம்பிச்சிட்டாக. எங்ஙன கண்டாலும் எலிகளக்கொல்லத் தொடங்கிட்டாக. அப்பொ எடுத்த கம்பை இன்னும் கீழ போடலையாம்.
எலிகள அடிச்சிக் கொன்னுக்கிட்டுதாம் இருக்காக.
அடிக்க அடிக்க எலிக உண்டாயிட்டே இருக்காம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications