பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

சூரிய தரிசனம்

கருதியின் கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேந்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன் செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்:
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. (1)


வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்:
நாத வார் கடலின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்:
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்.
ஆணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. (2)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+