பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 23, 2001
திலக முனிவர் கோன்
நாட்டினோர் தம் கலையிலும் அவ்வவர்
தாம கத்து வியப்பப் பயின்றொரு
சாத்தி ரக்கட லென்ன விளங்குவோன்:
மாம கட்குப் பிறப்பிட மாகமுன்
வாழ்த்திந் நாளில் வறண்டயர் பாரதப்
பூம கட்கு மனந்துடித் தேயிவள்
புன்மை போக்குவல் என்ற விரதமே. (1)
நெஞ்ச கத்தொர் கணத்திலும் நீங்கிலான்
நீத மேயொர் உருவெனத் தோன்றினான்:
வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை
மாய்க்கு மாறு மனதிற் கொதிக்கின்றான்:
துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும்
அன்பொ டோதும் பெயருடை யாரியன். (2)
வீரமிக்க மராட்டியர் ஆதர
மேவிப் பாரத தேவிதிருநுதல்
ஆரவைத்த திலக மெனத் திகழ்
ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்,
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே. (3)
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
