பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 25, 2001
( தொடர்ச்சி)
பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.
ஆனால், அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து
வார்த்தை சொல்லவேண்டும்.இல்லாவிட்டால், முகத்தைத்
தூக்கிக் கொண்டு சும்மா இருந்து விடும், பெண்களைர் போல
எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும்,அதில் சந்தேகமே யில்லை,
ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு,
ஒன்று ஒரு சாண்: மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்: ஒன்று பெண்: கணவனும், மனைவியும்.
அவையிரண்டும் ஒன்றையொன்று காமப் பார்வைகள்
பார்த்துக் கொண்டும்,.புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும்.
வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப்போக்கிலேயிருந்தன.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
