கண்ணதாசனை காணுவோம்
சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா, பின்னாளில் மாபெரும் கவிஞராக மாறுவார் என்று அவரைப் பெற்ற சாத்தப்பனும், விசாலாட்சியும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், முத்தையா கனவு கண்டார். அவரது கனவும் பலித்தது. கண்ணதாசனாக மாறி, நமக்கெல்லாம், சொல்விருந்து படைத்தார்.
கண்ணதாசன், வார்த்தைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட நறுக்கு தெரித்தாற் போல இருந்தவர். 1921-ம் ஆண்டு,ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், சென்னைக்கு வந்து, சொல்லாட்சி புரிவதற்கு முன் பட்ட துன்பங்கள்,துயரங்கள், வருத்தங்கள், வலிகள் ஏராளம். (அத்தனையும் பின்னாளில் நமக்குப் பாடல்களாகக் கிடைத்தது வேறுவிஷயம்.)
எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவராக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும், தனதுவார்த்தைகளில் படம் பிடித்துக் காட்டினார் கண்ணதாசன்.
தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒவ்வொரு சம்பவத்தையும், அப்படியே பாட்டுக்களில் வடித்த கவிஞர் இவராகமட்டுமே இருக்க முடியும். 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை வடித்துள்ளார் கண்ணதாசன். அத்தனையும் தேன்துளிகள்.
தத்துவப் பாடல்களால் நமது கண்களைத் திறந்த கண்ணதாசன், 1981-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதிஅமெரிக்காவில் கண் மூடினார்.
கண்ணதாசனின் பாடல்கள் இப்போதும் சிந்திக்க வைப்பதற்குக் காரணம், அவரது வார்த்தைகளில் உள்ளநிதர்சனம், உண்மை, இயல்பு ஆகியவையே. தான் அனுபவித்த, உணர்ந்த, பட்ட சம்பவங்களை அப்படியேகொடுத்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல, சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால், தமிழகமக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டன.
காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல சொல்ல, அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு.
கண்ணதாசனைக் காண வேண்டும், அவரது பாடல்களை ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இதுஒரு சிறு காணிக்கை.
வாருங்கள், அனுபவியுங்கள் ...
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications