For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணதாசனை காணுவோம்

By Staff
Google Oneindia Tamil News

6. மலர்ந்தும் மலராத ..

பெ: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

ஆ : (மலர்ந்தும் மலராத பாதிமலர் போல)
யானைப் படைகொண்டு சேனை பலவென்று
ஆளப் பிறந்தாயடா - புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா

பெ: தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் - தந்து மணம் பேசுவார்
மாமன் - தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் - உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான - மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்...

ஆ : நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி - மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே!

பெ: சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா

ஆ : கண்ணின் மணிபோல மணியின் நிழல்போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானம் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவை பிரிக்க முடியாதடா


7. தொட்டு விடத் தொட்டு விடத் ..

பெ: தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் - கை
பட்டுவிடப் பட்டுவிட மலரும்
ஆ : பக்கம் வர பக்கம் வர மயங்கும் - உடன்
வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்!

முத்து முத்துப் புன்னகையை சேர்த்து - கண்
முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டிச் செல்லுவதைப் பார்த்து
நெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று! (தொட்டு)

பெ: கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் - சொல்லைக்
கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும் - இடை
கெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்
ஆ: அள்ளி அள்ளி வைத்துக்கொள்ளத் துடிக்கும்
சொல்லிச் சொல்லிப் பாடங்களை படிக்கும்
பெ: துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் - கன்னம்
ஆ : கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்ல சிரிக்கும் (தொ)


8. ஒருவன் மனது ஒன்பதடா ..

ஒருவன் மனது ஒன்பதடா - அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா - அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)


9.சிட்டுக் குருவி ..

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே
வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே! (சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே! (சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா (சிட்டு)


10. பார்த்த ஞாபகம் இல்லையோ ..


பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என்ன நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X