எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!
சின்ன வயதில் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு ஊரில் நரி ஒன்று இருந்ததாம். அது ஒரு காட்டு வழி தனியேசென்றதாம். அங்கு ஒரு திராட்சைத் தோட்டத்தைக் கண்டதாம். அந்தத் தோட்டத்தில் திராட்சை கொத்துக் கொத்தாக காய்த்துத்தொங்கியதாம். நரிக்கு நாவில் எச்சில் ஊறியதாம். எட்டாத உயரத்தில் இருந்த கனிகளைப் பறிக்க தன்னால் முடிந்த அளவு குதித்துகுதித்துப் போராடிப் பார்த்ததாம்.
அதன் முயற்சி பலனளிக்கவில்லை. கடைசியில் சீ..சீ இந்தப்பழம் புளிக்கும் என்று அங்கிருந்துஓட்டம் பிடித்ததாம். சிறு வயதில் படித்த இந்தக் கதை சட்டென்று நினைவுக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை. எட்டாதபழத்துக்குக் கொட்டாவி விடும் பழக்கம் ஆறறிவுள்ள மனிதர்களிடமே இருக்கும்போது ஐந்தறிவு படைத்தவைகளிடம்இருப்பதில் என்ன வியப்பு?
அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அரசியல் நாகரிகம் சிறிதும்இல்லாமல் மிகவும் கடுமையாக விமர்சித்தார் முதல்வர் ஜெயலலிதா. அது மட்டுமல்ல, யார் தயவில் இன்று முதல்வர் பதவியில்ஒட்டிக்கொண்டு இருக்கின்றரோ அவர்களை எல்லாம் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார். சென்றசட்டமன்றத் தேர்தலில் தோள் கொடுத்து உதவி உயர்த்திவிட்ட பா.ம.க நிறுவனர் இராமதாஸ், வாசன், வீரமணி,கம்யூனிஸ்ட்டுகள் என்று அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அர்ச்சனையை வாரிவழங்க அம்மையார்தயங்கியதே இல்லை. தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு திமுகவின் வாக்குகளைப் பிரித்த வைகோவையும் விட்டு வைக்கவில்லை.தனக்கு மறைமுகமாக உதவி செய்து ஆட்சிக்கட்டிலில் அமர வைத்த வைகோவை பொடாவில் உள்ளே போட்டார்.
எல்லாவற்றிற்க்கும் சிகரம் வைத்ததுபோல் அன்னை சோனியா காந்தியைப் பெண் என்றும் பாராமல் மிகவும் தரம் குறைந்தவார்த்தைகளால் தனிப்பட்ட முறையில் அண்டோனியா மைனோ என்றும் பதிபக்தி இல்லாதவர் என்றும் விமர்சித்தையாராலும் மறக்க முடியாது. தமிழகத்திலுள்ள ஒரு சில ஜெ. ஆதரவு காங்கிரஸ்காரர்கள் மறந்தாலும் தமிழக மக்கள் அதுவும்பெண்கள் மன்னிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று நிலமை என்ன? முதல்வர் ஜெ.க்கு காலம் கடந்த ஞானதோயம்ஏற்பட்டுள்ளது. தன் வழக்குகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ காங்கிரஸ் தயவுஇப்போது தேவைப்படுகிறது. எனவே காங்கிரஸ் பக்கம் நெருங்க முயல்கிறார்.
தமிழக காங்கிரஸ்சில், ஜெயின் கடைக்கண் பார்வைக்கு ஏக்கத்துடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் ஒரு சில காங்கிரஸ்காரர்கள்வழியாக டெல்லியிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் டெல்லி செய்தியாளர்கள் கூட்டத்தில்,வீட்டுக்கு ஒரு நல்லவர், நாட்டுக்கு ஒரு வல்லவர் என்று பிரதமருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார் முதல்வர் ஜெ.அதோடு தனக்கு பல முகங்கள் உண்டு என்றும் வேறு பல முகங்களை விரைவில் பார்ப்பீர்கள் என்று விளக்கமும் அளித்திருக்கிறார்.
ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிட்டார் முதல்வர். எத்தனை முகம் காட்டினாலும் அதற்கு மயங்கி மசிய அன்னை சோனியாகாந்தி ஒன்றும் சாதாரண சராசரி இந்திய அரசியல்வாதி இல்லை. அரசியலில் இது எல்லாம் சகஜம்பா என்று கவுண்டமணிபாணியில் சொல்வதற்கு. பிரதமர் பதவி தன்னைத் தேடி, நாடி, ஓடிவந்தும் அதை ஏற்காமல் துச்சமென தூக்கி எறிந்தவர் அன்னைசோனியா காந்தி. அதிமுக சார்பாக அவரிடம் தூது சென்ற காங்கிரஸ்காரர்களிடம் கடுமையாக எச்சரித்தும் அனுப்பியிருக்கிறார்.முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதன் விளைவாகத்தான் அண்மையில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி இந்தியப்பிரதமராவதை எப்போதும் எதிர்ப்பேன் என்று மறுபடியும் கூற ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெ.
ஆரம்பத்தில் உள்ள நரிக்கதைக்கும் இந் நிகழ்வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
- அக்னிப்புத்திரன் ([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications