For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு தமிழன்பனுக்கு சாகித்ய அகாடமி விருது

By Staff
Google Oneindia Tamil News

டிசம்பர் 23, 2004

டெல்லி:

ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதை நூலுக்கு 2004ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

Tamilanban2004ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. தமிழில், ஈரோடுதமிழன்பன் எழுதிய வணக்கம் வள்ளுவா என்ற கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

தமிழன்பன் தவிர மொத்தம் 22 பேருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளைஅகாடமி தலைவர் கோபிசந்த் நாரங் அறிவித்தார்.

தமிழுக்கான விருதைத் தேர்வு செய்யும் குழுவில் கி.ராஜநாராயணன், கே.செல்லப்பன், பத்மாவதி விவேகானந்தன் ஆகியோர்இடம் பெற்றிருந்தனர்.

தமிழன்பன் ஏராளமான கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும்இருந்துள்ளார். தற்போது இலக்கியப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

1954ம் ஆண்டு முதல் 2004 வரை .. அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியவாதிகள்

1954 - தமிழ் இன்பம் (கட்டுரைகள்) - ரா.பி.சேதுப்பிள்ளை.

1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி.

1958 - சக்கரவர்த்தி திருமகன் - ராஜாஜி.

1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வ (.வரதராஜன்).

1962 - அக்கரை சீமையில் (பயணக் கட்டுரை) - சோ என்ற மீ.பா.சோமசுந்தரம்.

1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன்.

1965 - ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி.ஸ் ஆச்சார்யா.

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம.பொ.சிவஞானம்.

1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி.வா.ஜகன்னாதன்.

1968 - வெள்ளைப் பறவை (நாடகம்) - ஏ. ஸ்ரீனிவாச ராகவன்.

1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்.

1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - ஜி.அழகிரிசாமி.

1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி.

1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்.

1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்.

1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே.டி.திருநாவுக்கரசு.

1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர்.தண்டாயுதம்.

1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி.

1978 - புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்.

1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைகள்) - தி.ஜானகிராமன்.

1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்.

1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - எம்.ராமலிங்கம்.

1982 - மணிக்கொடிகாலம் (இலக்கிய வரலாறு) - பி.எஸ்.ராமய்யா.

1983 - பாரதி - காலமும் கருத்தும் (விமர்சனம்) - டி.எம்.சி. ரகுநாதன்.

1984 - ஒரு காவேரியைப் போல (நாவல்) - லட்சுமி.

1985 - கம்பன்: புதிய பார்வை - அ.ச.ஞானசம்பந்தன்.

1986 - இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (விமர்சனம்) - க.நா.சு.

1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைகள்) - ஆதவன் சுந்தரம்.

1988 - வாழும் வள்ளுவம் (விமர்சனம்) - வா.சே. குழந்தைசாமி.

1989 - சிந்தாநதி - லா.ச.ராமாமிர்தம்.

1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு.சமுத்திரம்.

1991 - கோபல்லபுரத்து மக்கள் (நாவல்) - கி.ராஜநாராயணன்.

1992 -குற்றாலக்குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்.

1993 - காதுகள் (நாவல்) - எம்.வி.வெங்கட்ராம்.

1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன்.

1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்.

1996 - அப்பாவின் ஸ்னேகிதர் (சிறுகதைகள்) - அசோகமித்திரன்.

1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகம்மது மீரான்.

1998 - விசாரணை கமிஷன் (நாவல்) - சா.கந்தசாமி.

1999 - ஆலாபனை (கவிதை) - அப்துல் ரகுமான்.

2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் - தி.க.சிவசங்கரன்.

2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி.சு.செல்லப்பா.

2002 - ஒரு கிராமத்து நாடி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்.

2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து.

2004 - வணக்கம் வள்ளுவா (கவிதை) - ஈரோடு தமிழன்பன்.

1955, 1957, 1959, 1960, 1964, 1976 ஆகிய ஆண்டுகளில் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X