• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் வழிக் கல்வி - தேவையும் நியாயங்களும்

By Staff
|

மருத்துவர் சு. நரேந்திரன் எழுதியுள்ள தமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா என்னும் நூல் அரிய செய்திகளைத் தன்னுள்கொண்டுள்ளது.

20 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப் பட்டிருக்கும் பல செய்திகள், தமிழ்த்தேசிய அரசியலாளருக்கு பேருதவிசெய்கின்றன.

தமிழ்வழிக் கல்வியின் தோற்றம், வரலாறு, புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ்க்கல்வி, தமிழ்வழிக்கல்வியை ஆதரித்துநடைபெற்ற நிகழ்வுகள் என்று பல்வேறு செய்திகள் நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. நூலிலிருந்து சில பகுதிகள்...

ஆந்திரத்தில் இரண்டாண்டுக் கால இண்டர்மீடியேட் படிப்பு தெலுங்கில் நடைபெறுகிறது. பட்டப் படிப்பில் கூட அடுத்த ஆண்டுமுதல் தெலுங்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. அங்குத் தனியார் கல்லூரிகள் கூட அரசாங்கத்தின் கொள்கை வழியே நடந்துவருகின்றன.

அசாம் மாநிலத்தில் பி.யூ.சி. தவிரப் பட்டப்படிப்பில் மனித இயல் சாத்திரம் தாய்மொழியில் கற்பிக்கப்படுகிறது.

பீகாரில் மனித இயல் சாத்திரங்கள் அனைத்தும் இந்தியில் போதிக்கப்படுகின்றது. பிற்காலப் பட்டப்படிப்பு மட்டுமேஆங்கிலத்தில் நடைபெறுகிறது.

டில்லிப் பல்கலைக் கழகத்தில் இந்தி, ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒரு மொழியில் புதுமுகப் படிப்பு - பட்டப் படிப்புஇரண்டையும் பெறலாம்.

பட்டப்படிப்பு வரை டில்லி ஜமிலியா கல்லூரியில் இந்தி அல்லது உருது மொழியில் உள்ளதைக் கூறலாம்.

குஜராத்தில் விஞ்ஞானம் உட்பட எல்லாப் பாடங்களுக்கும் பட்ட ஆராய்ச்சிப் படிப்புவரை குஜராத்தி மொழியே பயன்பட்டுவருகிறது.

அரியானா, பஞ்சாப், சண்டிகர் பல்கலைக் கழகங்களில் இந்தி, பஞ்சாபி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் பட்டப்படிப்புக்குப் பயன்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் மனித இயல் சாத்திரம் அனைத்துக்கும் - விஞ்ஞானப் பட்டப்படிப்புக்கும் இந்தியே பயன்படுகிறது. தொழில்நுணுக்கப் படிப்பு தவிர மற்றவை மராட்டியத்தில் பட்டப்படிப்பு வரை மராத்தியிலும் ஆங்கிலத்திலும் தான்போதிக்கப்படுகின்றன.

மைசூரில் புதுமுகக் கல்விக்கும் பட்டப்படிப்பில் ஒரு துறைக்கும் கன்னடமே பயன்படுகிறது. ராஜஸ்தானில் இந்தி வட்டாரமொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கிலம் விருப்ப மொழியாக இருக்கிறது.

ஒரிசாவில் அடுத்த ஆண்டு தேர்வுக்குப் புதுமுக வகுப்பு மொழியாக ஒரியா ஆகவிருக்கிறது. பட்டப்படிப்பு வளரவங்காளத்தில் வங்காள மொழியும் ஆங்கிலத்துடன் பயிற்சி மொழி ஆகியுள்ளது. கேரளம் ஒன்றில் தான் இன்னும் ஆங்கிலம்மட்டுமே நீடிக்கிறது.

இடப் பெயர்ச்சியும் வேலை வாய்ப்பும் மனித இயல் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பல மாநிலங்களில் தாய்மொழியிலேயே பயிற்சி நடைபெறுகிறது. அதே வகையில் இந்த முற்போக்கான நடவடிக்கையில் தமிழ்நாடும் ஈடுபடவேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பாதகம் என்ற வாதம் இனியும் செல்லுபடியாகாது. அநேகமாக எல்லாப்பல்கலைக்கழகங்களிலும் அந்தந்த மாநில மொழியில் தான் போதனை நடக்கிறது.

கடந்த 1955இல் ஆட்சி மொழிக் குழுவிற்குக் கல்லூரி மாணவர் ஆசிரியர் ஆகியோர் இடம் பெயர்வது குறித்துச் சென்னைப்பல்கலைக் கழகம் அளித்த பதில் கூறியிருப்பதாவது:

""கல்லூரி மாணவர்கள் - ஆசிரியர்கள் இடம் பெயர்வது மிக மிகக் குறைந்த அளவில் நடைபெறுகிறது. இதற்காக எல்லாஇடங்களிலும் ஒரு பொது மொழி இருக்க வேண்டும் என்பது தேவையற்றது. ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாநிலத்தன்மைவந்துவிட்டது. பிற மாநிலங்களில் கல்லூரியிலோ பிற இடங்களிலோ வேலையில் அமருவதற்கு வாய்ப்பு மிக அருமை.

பாடமொழி ஆங்கிலம்:

தமிழ்ப் பயிற்று மொழி என்ற கொள்கைக்கு அரசு ஆட்பட்டிருப்பினும், ஆங்கிலப் படிப்பை வளர்க்கும் அவசியத்தை அரசுஉணர்ந்தேயுள்ளது. மூன்றாம் வகுப்பிலிருந்தே இங்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப் படுகிறது. தென்னாட்டில் தமிழ்நாடு ஒன்றில்தான் இவ்வாறு நடைபெறுகிறது.

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தான் இந்த நடைறை உள்ளது. பல மாநிலங்களிலும் 5ஆம் வகுப்பிருந்து தான் ஆங்கிலம்கற்றுத் தரப்படுகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்சியைச் செம்மைப்படுத்த பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன்தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, ஆங்கிலம் புறக்கணிக்கப்படுகிறது என்பது சரியானதன்று.

சிறந்த பயன்கள்:

பாடங்களைப் புரிந்து கொள்ளவும், சகத்திருந்து தனிமைப் படுத்தப்படாமல் இருக்கவும் தாய்மொழிக் கல்வியே இருக்கவேண்டும் என மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசப் பெருந்தலைவர்கள் பலர் வற்புறுத்தி உள்ளனர்.

தாய் மொழிக் கல்விக் கொள்கையானது தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும். மாணவனுக்குச் சகத்துடன் பொருள் பொதிந்தஉறவை ஏற்படுத்தும். கல்வியறிவு பெறாத மக்களுக்கு மாணவர்களின் கல்வியறிவைப் பயன்படச் செய்யும். நம் நாட்டின் அறிவு,கலாச்சாரம் மரபுகளுக்கேற்ற வகையில் நமது கல்விமுறை இருக்க வேண்டும் என்றே மகாத்மா காந்தி கூறிவந்தார்.

இந்தத் துறையில் தாய்மொழிக் கல்வி சக்தி வாய்ந்த பயன் விளைவிக்கும் வழிமுறையாகும் என்று வாசிக்கப்பட்ட இந்தஅறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இதே காலத்தில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் டாக்டர் ஏ.லெட்சுமணசாமி முதலியார், டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் உள்பட பலர் ஆங்கிலப் பாதுகாப்பு மாநாடு நடத்தினர். அம்மாநாட்டில் ஆங்கிலம் என்றென்றும்நிலைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை விளக்கத்தினை முன்னிறுத்தினர்.

இதன் காரணமாக ஆங்கிலம் வாழ்க, தமிழ் ஒழிக என்று கூறுமளவுக்கு மாநிலம் முழுவதும் போராட்டம் தொடர்வதைக் கண்டுகுன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் கலைஞரிடம் சிறிது காலம் தமிழ்ப்பயிற்றுமொழி ஆணையை நிறுத்தி வைக்க கோரினர் என்பது சரித்திரம்.

தமிழ்வழிக் கல்விக்கான மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு 1970 டிசம்பர் 28ல் டாக்டர் ஏ.லெட்சுமணசாமிமுதலியாரைத் தலைவராகக் கொண்டு நெ.து.சுந்தரவடிவேல், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சந்திரன், தேவநேசன்,ஜி.ஆர்.தாமோதரன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு பயிற்று மொழி குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது.

இவ்வல்லுநர் குழு, ஆய்விற்குப்பின் அரசுக்குப் பின்வரும் பரிந்துரைகளை முன் வைத்தது.

1. பயிற்று மொழியைத் தேர்வு செய்யும் உரிமையை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

2. தமிழ் மட்டும் கற்க வாய்ப்பளிக்கப்படும் அரசுக் கல்லூரிகளில் ஆங்கில வழியில் பயில விரும்பும் மாணவர்களுக்குத் தக்கவழிகளைச் செய்து தர வேண்டும்.

3. தமிழ் பயிற்று மொழியாக்கப்படாத தனியார் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை மாணவர்கள் விரும்பு வார்களாயின் தக்கநடவடிக்கைகளைச் செய்யுமாறு தனியார் கல்லூரி நிருவாகத்தினரை அரசு பணிக்க வேண்டும்.

தமிழ் வழிக் கல்வி ஒரு கானல் நீரா?

மருத்துவர் சு. நரேந்திரன், வெளியீடு : கற்பகம் புத்தகாலயம்,

50/18, ராஜா பாதர் தெரு,

பாண்டிபஜார், தியாகராய நகர்,

சென்னை - 600 017.

தொலைபேசி :28154347.

பக்கங்கள் : 232, விலை : ரூ. 85.00

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X