கார்க்கியின் தாய்க் காவியத்தை மொழி பெயர்த்த கருணாநிதிசென்னை:
திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதை மழை மற்றும் ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் நூலை மொழி பெயர்த்துகருணாநிதி எழுதிய தாய் காவியம் ஆகிய நூல்கள் சென்னையில் வெளியிடப்பட்டன.
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்த விழாவில் கவிதை மழை நூலை கவிஞர் அப்துல் ரகுமான்வெளியிட மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். தாய் காவியத்தை கவிஞர் வைரமுத்து வெளியிடமத்திய அமைச்சர் ராஜா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ரஷ்ய தென் இந்தியத் தூதர் மைக்கேல் மெக்னாடிஸ் கலந்து கொண்டு தமிழில் பேசி அசத்தினார்.
அவர் கூறுகையில், ரஷ்ய நூலை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய கருணாநிதிக்கு தனது நாட்டின் சார்பில்பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும், இது போன்ற பண்பாட்டுப் பரிவர்த்தனைகளை கருணாநிதி தொடரவேண்டும் என்றும் கூறினார்.
வைரமுத்து பேசுகையில், ரஷ்ய கவிஞர் கார்க்கி பிறந்த ஊரிலிருந்து மண் எடுத்து வர ஏற்பாடு செய்துள்ளேன்.அதை கருணாநிதியிடம் விரைவில் வழங்குவேன் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நல்லகண்ணுஆகியோரும் இதில் பங்கேற்றனர். கார்க்கியின் ஓவியத்தை கருணாநிதிக்கு நல்லகண்ணு பரிசாக அளித்தார்.
சங்கரய்யா பேசுகையில், தாய்க் காவியத்தை கார்க்கி எந்த உணர்வோடு எழுதினாரே அதே உணர்வோடு தான்இந்த நூலையும் கருணாநிதியும் எழுதியிருக்கிறார். கம்யூனிஸ்டுகள் செய்திருக்க வேண்டிய கருணாநிதிசெய்திருக்கிறார்.
ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டவர் கார்க்கி. மீண்டும் நிச்சயம் ஒரு நாள் ரஷ்யாவில் கம்யூனிசம் தலைதூக்கும் என்றார்.
பின்னர் கருணாநிதி ஏற்புரை ஆற்றிப் பேசுகையில்,
கவிதை மழை நூல், 1937-38ம் ஆண்டில் இருந்து நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. பெரியாரின்இயக்கத்தில் ஈடுபட்டபோது, அண்ணாவின் அன்புக்கு ஆளாகி தமிழ்ப் பணி ஆற்றிய காலந்தொட்டு, இதுவரைநான் எழுதுவது பேசுவது எல்லாமே லட்சியப் பிடிப்போடு தான்.
சங்கரய்யா அவர்கள் பேசும்போது, கம்யூனிஸ்ட் காரர்கள் செய்திருக்க வேண்டிய வேலையை கருணாநிதிசெய்துள்ளார் என்றார். என்னை ஏன் இன்னும் பிரித்துப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் ஒருவன் தான். நான்எழுதியிருக்கிறேன் என்றால் ஒரு கம்யூனிஸ்ட் தான் எழுதியிருக்கிறான் என்றே எண்ணிக் கொள்ளுங்கள்.
சிறு வயதிலேயே செங்கொடி சிறுவன் தான் நான். பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால்தஞ்சை மண்ணில் செங்கோடி ஏந்தி போராடிக் கொண்டு இருந்திருப்பேன்.
இன்று திமுகவின் தலைவன் என்றாலும் கொள்கையால் என்றும் கம்யூனிஸத்தோடு பின்னிப் பிணைந்தவன் தான்நான்.
எடுத்த உறுதியை, லட்சியத்தை, குறிக்கோளை தடங்கல் இல்லாமல், தயங்காமல் மேற்கொண்டதால் தான்இதுபோன்ற நூல்களை என்னால் ஆக்க முடிந்தது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் வாலி, சுரதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications