மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு-பழ.நெடுமாறனுடன் சந்திப்பு
பேட்டி: சுதா. அறிவழகன்
இந்திரா காந்திக்குப் பிறகு வந்த மத்திய அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையின்முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும்,உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் குற்றம் சாட்டுகிறார்.
இலங்கைத் தமிழர்களுக்காக நீண்ட நெடுங்காலமாக சலிக்காமல் குரல் கொடுத்து,அயராமல் பாடுபட்டு வருபவர் நெடுமாறன். தமிழகத்தில் உள்ள தலைவர்களிலேயேஇவரை விட இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் யாரும் இருக்கமுடியாது.
பொடா சட்டத்தின் வாயில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர். அப்படியும் குரல்தளராமல், ஈழத் தமிழர்களுக்காக முழங்கி வரும் தமிழகத்தின் மூத்த தலைவர்களில்ஒருவரான நெடுமாறன்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் உரியமுக்கியத்துவம் தரவில்லை என்று குறைபடுகிறார், குற்றம் சாட்டுகிறார் நெடுமாறன்.அவருடன் உரையாடியபோது நம்முடன் பகிர்ந்து கொண்டவை.
ஏமாற்றும் இந்திய அரசு:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது.சிங்கள கடற்படைக்கு வெடிப் பொருட்களை அனுப்பியபோது, அதை மதுரை அருகேபறிமுதல் செய்வது போல நடந்து கொண்டு அதைத் தடுத்து நிறுத்தாமல் அனுப்பிவிட்டது தமிழக போலீஸ்.
இதுகுறித்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களால் மத்தியஅரசிடம் கேள்வி கேட்க முடியவில்லை. இங்கிருந்து வெடிபொருட்கள் போவதைதடுத்து நிறுத்த மனமும் இல்லை.
மானாமதுரை அருகே விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பியதாக கைதுசெய்து சிலர் மீது வழக்குப் போட்டது போல இப்போதும் வழக்குப் போட்டிருக்கவேண்டியதுதானே? ஏன் போடவில்லை?
யாழ்ப்பாணத்தில் தமிழர்களை பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.அங்குள்ள நெடுஞ்சாலையை மூடி விட்டனர். இதை மனிதாபிமான முறையில்இந்தியா கண்டிருத்திருக்க வேண்டுமா, இல்லையா? மனிதாபிமான முறையில்கண்டிக்க இந்தியாவுக்கு தயக்கம் ஏன்?
அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவும், உலக நாடுகளும்இலங்கைக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி இருந்தபோது 1983ம்ஆண்டு தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்தஇனப்படுகொலையை இந்திரா காந்தி கடுமையாக கண்டித்தார்.
உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா தலையிடும்என்று கண்டித்தார். இதையடுத்து பயந்து போன இலங்கை அரசு தாக்குதலை நிறுத்திவிட்டது.
மேனனை கருணாநிதி சந்தித்தது தவறு:
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் முதல்வர் கருணாநிதி. அவரை சாதாரணஅதிகாரிகளான சிவசங்கர மேனனும், நாராயணனும் சந்தித்துள்ளனர். இவர்களைகருணாநிதி சந்தித்திருக்கவே கூடாது. மறுத்திருக்க வேண்டும்.
அமைச்சர்களையோ அல்லது அமைச்சர் அந்தஸ்திலான அதிகாரியையோதான்அனுப்பியிருக்க வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதுஜி.பார்த்தசாரதியை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை செல்வதற்கு முன்பும், போனபின்னரும் சென்னை வந்து தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரை சந்தித்துஆலோசித்து விட்டுத்தான் செல்வார் ஜி.பார்த்தசாரதி. இலங்கைத் தமிழர்பிரச்சினையை முக்கியப் பிரச்சினையாக இந்தியா கருதுவதாக இந்திரா காந்திதெரிவித்தார்.
இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு ஜெயவர்த்தனே பயந்துபோனார். ஆனால் இந்திராவுக்குப் பின்னர் வந்த அரசுகள் இலங்கைப் பிரச்சினையின்முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன. இலங்கை அரசுடன் பேசுவதாக இருந்தால்அமைச்சர்கள் யாராவது போயிருக்க வேண்டும். எதற்காக மேனன் போகிறார்?
பார்த்தசாரதி போன்றவர்கள் சென்னை வந்து முதல்வரை கலந்து பேசிய பிறகுதான்இலங்கைக்குச் செல்வார்கள், வருவார்கள். ஆனால் மேனனும், நாராயணனும்டெல்லியிலிருந்து நேராக கொழும்பு போனார்கள். பின்னர் டெல்லி திரும்பும் வழியில்சென்னையில் இறங்கி ஒப்புக்கு கருணாநிதியைப் பார்த்து விட்டுச் சென்று விட்டனர்.
உறுதியான நிலைப்பாடு வேண்டும்:
தமிழர் பிரச்சினையில் இப்போது தமிழக அரசியல் கட்சிகள் காட்டி வரும் ஆதரவுபோதாது. மத்திய அரசின் நிலைப்பாடு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்.கட்சிகள் ஏதாவது ஒரு வகையில் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.சுப்பிரமணியம் சுவாமி மட்டும்தான் போராட்டம் நடத்தவில்லை.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.சிறைக் கொட்டடிகள் போல அவை காணப்படுகின்றன. அகதிகளை முறையாகபராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐ.நா. சபையின்அகதிகள் பராமரிப்பு பிரிவு இலங்கைத் தமிழ் அகதிகளை பார்த்துக் கொள்ளத் தயாராகஇருக்கிறது. அவர்களிடம் பொறுப்பை கொடுத்து விடலாம்.
துப்பாக்கி கொடுங்கள்:
தமிழக மீனவர்களை இலங்கை படையினர் தாக்குவது நெடுங்காலமாக நடந்துவருகிறது. கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததால் வந்த வினை இது. இதுவரை300க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்க ஒரே வழி நமதுமீனவர்கள் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான்.
உங்களால் நமது மீனவர்களைக் காக்க முடியவில்லை என்றால் அவர்கள் கையில்துப்பாகிகயைக் கொடுத்து விடுங்கள். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளட்டும் என்றார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications